இயக்குனருக்கு அஜித் கொடுக்கும் டார்ச்சர்.. இழுத்தடிக்கும் ஏகே 62 அறிவிப்பு

ஏகே 62 படத்தின் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் நெடு நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த மாதம் இறுதியிலாவது அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போது ஏகே 62 அறிவிப்பு வெளிவர ஏன் தாமதமாகிறது என்ற காரணம் வெளிவந்துள்ளது. இதற்கு எல்லாம் அஜித் தான் மூல காரணம் என்று கூறப்படுகிறது.

அதாவது அஜித் மற்றும் லைக்காவுக்கு முதலில் விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காத காரணத்தினால் அவரை தூக்கிவிட்டு மகிழ் திருமேனியை போட்டுள்ளனர். மகிழ் திருமேனியின் கதை அஜித்துக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். இப்போது முழு கதையையும் மகிழ்திருமேனி எழுதி வருகிறார்.

Also Read : ஷங்கரின் 4 படங்களை ரிஜெக்ட் செய்த அஜித்.. அவர் சவகாசமே வேண்டாம் என்பதற்கு இது தான் காரணம்

ஆனால் இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது மகிழ்திருமேனி கதை எழுதும் போது ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எடிட்டர் போன்ற தொழில்நுட்பாளர்களை அஜித் அங்கேயே இருக்க சொல்லி உள்ளாராம். மேலும் மற்றவர்களிடம் சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டு மகிழ்திருமேனியை அஜித் கதை எழுத சொல்லி உள்ளாராம்.

ஆகையால் மகிழ்திருமேனி எது செய்தாலும் இவர்களை கேட்டு திருத்தம் செய்து தான் திரைக்கதையை எழுத வேண்டி உள்ளது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் இருந்து எந்தத் தொய்வும் ஏற்படாமல் படத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

Also Read : அஜித்தை வைத்து தயாரித்து மண்ணை கவ்விய அமிதாப் பச்சன்.. ஆனா மொத்த பாடல்களும் ஹிட்டுன்னு சொன்னா நம்பவா போறீங்க

அதுமட்டுமின்றி லியோ படத்துடன் ஏகே 62 படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக அஜித் இவ்வாறு செய்துள்ளார். மேலும் படத்தை ஒரே வீச்சில் எடுத்து முடித்தால் தான் அவரால் வேர்ல்ட் டூர் போக முடியும். இதன் காரணமாக இயக்குனருக்கு அஜித் டார்ச்சர் கொடுத்து வருகிறார்.

எல்லோரையும் கேட்டு கதை எழுதுவதால் மகிழ்த்திருமேனி சற்று தடுமாறுகிறார். ஆகையால் இந்த மாத இறுதியிலும் ஏகே 62 படத்திற்கான அப்டேட் வருமா என்பது சந்தேகம் தான். மேலும் ரசிகர்கள் இப்படத்தின் அறிவிப்பு வருமா என்று காத்திருந்து வெறுப்படைந்து உள்ளார்கள்.

Also Read : மாதவனுக்காக உருவாக்கிய கதை.. அஜித் நடித்ததால் படுதோல்வி, புலம்பி தவிக்கும் இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்