தளபதிக்கு பயத்தை காட்டிய துணிவு படத்தின் வியாபாரம்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் அஜித்

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூரின் ஜி ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது. வரும் பொங்கலன்று இந்த படம் ரிலீஸ் ஆகுமென்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகிவிட்டது.

துணிவு படம் இத்தனை முக்கியதுவத்தை பெற்றதற்கான காரணம் என்னவென்றால் இந்த படம் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்துடன் நேரடியாக மோதுகிறது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தும், விஜயும் திரையில் நேரடியாக மோதுகிறார்கள். துணிவு vs வாரிசு பொங்கலை அஜித், விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Also Read: இதிலும் விஜய்க்கு போட்டியான அஜித்.. துணிவு கதையில் இருக்கும் சீக்ரெட்

எப்போதுமே ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதன் சேட்டிலைட் உரிமம், ஓடிடி வெளியீட்டு உரிமை என வியாபாரத்தை ஆரம்பித்து விடும். அப்படி தான் வாரிசு திரைப்படம் தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களின் உரிமை கிட்டத்தட்ட 200 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. இப்போது அஜித்தின் துணிவு திரைப்படம் இந்த வசூலை தாண்டி விட்டது.

அஜித் மற்றும் மஞ்சு வாரியர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த ஓரிரு தினங்களில் இந்த படத்தின் வியாபார வசூலும் வெளிவந்து இருக்கிறது. இந்த படம் மொத்தம் இதுவரை 280 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. அதாவது வாரிசு படத்தை விட 80 கோடி அதிகம்.

Also Read: வந்தா மலை போனா மசுரு.. வாரிசை ஒரு கை பார்க்க, துணிவுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த உதயநிதி

விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் வரும் பொங்கலன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த தியேட்டர்களையும் ஆக்கிரமிக்க இருக்கிறது. 8 வருடங்களுக்கு பிறகு இருவரின் படமும் மோதுகிறது. இந்த எட்டு வருடத்தில் அஜித் மற்றும் விஜயின் மாஸ் மற்றும் இமேஜ் இன்னுமே அதிகரித்து இருக்கிறது.

துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்சும், சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும் பெற்றிருக்கிறது. ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் அஜித், விஜய் ரசிகர்களின் விவாதங்கள் களைகட்ட ஆரம்பித்து விட்டன. இனிவரும் காலங்களில் இது இன்னுமே அதிகமாகும். மேலும் இந்த இரண்டு படங்களின் வியாபாரங்களும் இப்போது பரபரப்பாக ஆரம்பித்து விட்டன.

Also Read: ஒரு பக்கம் அதிர்ச்சி, மறுபக்கம் தளபதி மகிழ்ச்சி.. ஜவ்வாக இழுத்துக் கொண்டு போகும் அஜித் பட இயக்குனர்

- Advertisement -