என் டிரஸ், என் இஷ்டம் உனக்கென்ன.. குறை சொல்றவங்க வாயை அடைத்த அஜித்தின் ரீல் மகள்

Ajith: சினிமாவில் நடிக்க வந்து விட்டாலே நடிகைகள் பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி இருக்கிறது. அதில் ஒன்றுதான் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிவரும் சர்ச்சைகள்.

இதை சிலர் கண்டுக்காமல் கடந்து சென்று விடுவார்கள். சிலர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அப்படித்தான் அஜித்தின் ரீல் மகள் என்ற அடையாளத்துடன் இருக்கும் அனிகா சுரேந்திரன் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

anikha-actress
anikha-actress

அதாவது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ஸ்டைலாக போட்டோ ஷூட் நடத்துவதுண்டு. சிறு வயதிலிருந்து இவர் கொஞ்சம் கிளாமரான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார்.

actress-anikha
actress-anikha

என் உடை என் இஷ்டம்

அதற்கு எப்போதுமே நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வரும். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டு கொள்வதில்லை. ஆனால் சில சமயங்களில் இந்த விமர்சனங்கள் எல்லை மீறியதும் உண்டு.

அதனாலேயே தற்போது அவர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது என் உடை என் இஷ்டம். இதுபோன்று ஸ்டைலாக உடை அணிவது எனக்கு பிடித்திருக்கிறது. அதை ஏன் மற்றவர்கள் குறை சொல்ல வேண்டும்.

சினிமா துறையில் இருப்பதாலேயே பெண்கள் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருக்கிறது. நாங்களும் சாதாரண மனிதர்கள் தான் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து வருகிறது. மேலும் இன்று இவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள PT சார் வெளியாகி உள்ளது. அதில் இவருடைய நடிப்பை பலரும் புகழ்ந்து வரும் நிலையில் அம்மணியின் கிளாமர் போட்டோக்களும் வைரலாகி கொண்டிருக்கிறது.

இதற்கு முன் அனிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்

anikha surendran
anikha surendran
anikha-surendran
anikha-surendran
anikha actress
anikha actress
anikha actress
anikha actress
- Advertisement -