ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பூகம்பமாக வெடிக்கும் பிரச்சனையில் அடிபடாத அஜித்தின் பெயர்.. மற்ற நடிகர்கள் சிக்குவதற்கு இதான் காரணம்

Ajith: பல வருட காலங்களாக காவேரி பிரச்சினை தலைவிரித்து ஆடிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் மறுபடியும் காவிரி பிரச்சனை தொடர்பான போராட்டம் கர்நாடகாவில் தீவிரமடைந்த நிலையில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைச்சர் கடும் எதிர்ப்பை தெரிவித்து அவமானப்படுத்தி வெளியே அனுப்பி இருக்கிறார்.

அதாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று பிரச்சனை கர்நாடகாவில் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி உள்ள சித்தா திரைப்படம் கன்னடத்தில் சித்து என்ற பெயரில் வெளியிட்டு இருக்கிறார்கள். அத்துடன் இதற்கான பட ப்ரோமோஷன் வேலைகள் அங்கே நடத்தலாம் என்பதற்காக நடிகர் சித்தார்த் போயிருக்கிறார்.

Also read: சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட ஜெயிலர் நரசிம்மா.. ரஜினி செய்யாததை செய்து காட்டிய சிவராஜ்

அப்பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித்தார்த்தை மேடையில் இருந்து எழுந்திருக்க வைத்து வெளியே போக சொல்லி அடாவடியாக நடந்திருக்கிறார்கள். இந்த ஒரு விஷயம் தற்போது சர்ச்சையாக வெடித்து வருகிறது. அந்த வகையில் இவருக்கு சப்போர்ட்டாக பல நடிகர்கள் சித்தார்த் அசிங்கப்பட்டதற்காக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு காரணம் கூட முழுக்க முழுக்க நடிகர்கள் தான் என்று ஒரு பக்கம் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதாவது நடிகர்கள் அரசியல் பற்றி பேசி உள்ளே வருகிறதால் தான் இந்த அளவிற்கு அவமானத்தை சந்தித்து வருகிறார்கள். அப்படியே அவர்கள் தைரியமாக அரசியல் பற்றி பேச ஆரம்பித்து விட்டால் எல்லா சர்ச்சைக்கும் குரல் கொடுத்து துணிச்சலுடன் நிற்க வேண்டும்.

Also read: சித்தார்த்தின் டேட்டிங் வலையில் சிக்கி 5 நடிகைகள்.. கல்யாண ஆசையையே வெறுக்க வைத்த திரிஷாவின் உறவு

அது அவர்களால் முடியவில்லை என்றால் பேசாமல் நடிப்பை மட்டும் பார்த்துட்டு போனால் நன்றாக இருக்கும். இந்த விஷயத்திற்கு நடிகர் அஜித்தை அனைவரும் முன் உதாரணமாக எடுத்துப் பேசி வருகிறார்கள். அதாவது இவர் இருப்பது தான் சரியான முறை. எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் என்னுடைய வேலை நடிப்பது மட்டும்தான். அதை நான் சரியாக செய்து விட்டுப் போகிறேன் என்று இருக்கிறார்.

அதேபோலவே மற்ற நடிகர்களும் இருந்துவிட்டால் அவர்களுக்கு பிரச்சனையே வராது. அத்துடன் அரசியல் பேசும் நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு தான் அதிக பிரச்சனையும் வருகிறது. மேலும் அவர்கள் நடித்த படங்கள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா பக்கம் விடாமல் முன்னாடி மாதிரி தமிழ்நாட்டில் மட்டும் விட்டால் போதும் என்று இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இப்படித்தான் அசிங்கப்பட வேண்டும் என்று சிலர் அவர்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

Also read: நிஜ வாழ்க்கையிலும் பிளேபாயாகவே சுற்றி திரியும் 6 நடிகர்கள்.. முன்னணி ஹீரோயின்களை கழட்டிவிட்ட சித்தார்த்

- Advertisement -

Trending News