பக்காவா காய் நகர்த்தும் அஜித்குமார்.. போட்டோ, வீடியோ வைரல் ஆவதற்கு பின்னால் இருக்கும் பெரிய பிளான்

Ajithkumar: சோழியான் குடுமி சும்மா ஆடாதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அந்த விஷயம் இப்போ நம்ம ஹீரோக்களுக்கு தான் சரியாக இருக்கிறது. யார் எப்போ என்ன பண்ணுவாங்கன்னு கணிச்சு சொல்லவே முடியல. திடீர் திடீர்னு உடையுது தாம், உருளுதாம் என்று சந்திரமுகி படத்துல வடிவேலு சொல்லுவாரு.

அப்படித்தான் நம்ம ஹீரோக்கள் எடுக்கும் திடீர் முடிவுகள் எல்லாம் இருக்கிறது. சினிமாவில் சம்பாதித்த பணத்தை வீணாக்காமல் அதை முதலீடாக போட்டு லாபம் பார்ப்பதெல்லாம் சரிதான். ஆனால் சினிமாவே வேண்டாம் என ஒதுங்குவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு பக்கம் சினிமாவில் அதிகம் சம்பாதித்து விட்டேன், அதை மக்களுக்காக செலவு செய்ய சினிமாவை விட்டு ஒதுங்குகிறேன் என சிலர் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். ஒரு சிலர் ஆரம்பித்த தொழில் வெளிநாட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதனால் அங்கேயே போய் செட்டில் ஆக போகிறேன் என சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்று விடுகிறார்கள். சினிமாவில் தொடங்கி சினிமாவில் வாழ்க்கையை முடிப்பதற்கு யாருமே இல்லையா என தோன்றுகிறது.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ரசிகர்களை கூப்பிட்டு எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை உண்டு பண்ணுகிறார் என ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜய்க்கு போட்டியாக தான் அஜித் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுகிறார் எனவும் சொல்லி வருகிறார்கள்.

ஆனால் இந்த இரண்டு விஷயத்திலும் கொஞ்சம் கூட உண்மை இல்லை. விஜய் படப்பிடிப்பு நடத்தும் இடங்களில் இது போன்ற கூட்டம் கூடுவது காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் இப்போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலையாக விஜய் எந்த இடத்திற்கு ஷூட்டிங் செல்கிறார் என்பது அவருடைய நிர்வாகிகள் மூலம் வெளியில் தெரிந்து விடுகிறது.

பக்காவா காய் நகர்த்தும் அஜித்குமார்

அஜித்துக்கும் சமூக வலைதளத்திற்கும் சம்பந்தமே இல்ல. அவருடைய போட்டோ வீடியோக்கள் எப்படி வெளியாகிறது என எல்லோருக்கும் சந்தேகம் இருக்கும். அட அந்த போட்டோ எல்லாம் என்ன அஜித்தா வெளியிடுகிறார்.

அவருடைய ரசிகர்கள் அவருக்கு தெரியாமல் போட்டோ வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள் என்று சப்பை கட்டு கட்டலாம். ஆனால் உண்மையில் எப்போதாவது அஜித் ஷூட்டிங் இருப்பது போல் புகைப்படம் வெளியாகி இருக்கிறதா என யோசித்துப் பாருங்கள்.

அஜித் பைக் ஓட்டுவது போலத்தான் ஃபோட்டோ மற்றும் வீடியோ வெளியாகும். இதற்கு காரணம் என்ன என்பதை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். அதாவது இந்த போட்டோ மற்றும் வீடியோக்கள் முழுக்க அஜித் சம்மதத்துடன் தான் வெளியாகிறது.

அவர் சமீபத்தில் தொடங்கி இருக்கும் AK மோட்டார் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக தான் இது. இந்த நிறுவனத்தில் பயிற்சிக்காக சேர்ந்தால் அஜித்தே ஒரு நாள் சர்ப்ரைஸ் ஆக வந்து பைக் ஓட்ட சொல்லிக் கொடுப்பார் என்பது போல் ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது.

அஜித் கிட்ட பைக் ஓட்ட கத்துக்கலாம், அஜித் நமக்கு சோராக்கி போடுவார் என்ற கற்பனையில் ஒரு கூட்டம் அந்த நிறுவனத்தில் சேர அலை மோதிக் கொண்டிருக்கிறது. சினிமாவை தாண்டி அஜீத் இந்த பிசினஸில் முழுக்க கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக அந்த நன் சொல்லியிருக்கிறார்.

விஜய்க்கு அரசியல் என்றால், அஜித் அடுத்து நகர இருப்பது AK மோட்டார் பிசினஸ் வேலைகளில் தான். இப்படி எல்லாருமே சினிமாவை கழட்டி விட்டுவிட்டு போய்விட்டால் , தமிழ் சினிமாவில் நிலை தான் என்ன ஆவது என்று இப்போதே தோண ஆரம்பித்துவிட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்