அஜித் காசு விஷயத்தில் ரொம்பவும் கரெக்ட்டாக இருப்பார்.. ஹெச். வினோத்துக்கு அஜித் சொன்ன தரமான அட்வைஸ்

இயக்குனர் ஹெச்.வினோத் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து மூன்று படங்களில் பணியாற்றி இருக்கிறார். மேலும் அஜித்திற்கு மனதுக்கு நெருக்கமான இயக்குனர்களில் இவரும் ஒருவர். சினிமாவுக்கு வந்த குறுகிய நாட்களிலேயே இவருக்கு முன்னணி ஹீரோவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் வினோத் எந்த ஒரு இடத்திலும் அதற்காக பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அவ்வப்போது இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அல்லது பேட்டிகளில் அஜித் குமாரை பற்றி ஏதேனும் கேள்வி கேட்கப்பட்டால் அப்போது சுவாரஸ்யமான தகவல் எதையாவது ரசிகர்களிடையே பகிர்ந்து கொள்வார். அப்படி ஒரு பேட்டியில் அஜித் தனக்கு சொல்லிய ஒரு தரமான அட்வைஸ் பற்றி பகிர்ந்து இருக்கிறார் இவர். இது வினோத்திற்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பொருந்தும் அறிவுரை தான்.

Also Read:ஆடம்பர பங்களா, பிஎம்டபிள்யூ, லம்போர்கினி.. மிரள வைக்கும் அஜித்தின் சொத்து மதிப்பு

நடிகர் அஜித்குமார் காசு விஷயத்தில் எப்போதுமே ரொம்ப கரெக்டாக நடந்து கொள்வாராம். முதலில் தான் செலுத்த வேண்டிய வருமான வரிக்கான காசை தனியாக எடுத்து வைத்துவிட்டு தான் மற்ற செலவுகளை பார்ப்பாராம். மேலும் அவர் வினோத்திடம் எப்போதுமே உங்கள் வருமானத்தில் ஒரு பத்து சதவீதத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னால் யாராவது உங்களிடம் உதவி என்று வரும் பொழுது அதைக் கொடுத்து உதவி செய்யுங்கள் என்று சொன்னாராம்.

மேலும் பணம் அதிகமாக இருக்கிறது என்று செலவுகளை அகல கால் வைத்து செய்து விடக்கூடாது என்று அறிவுரை சொல்லினாராம். அஜித் தன்னுடைய கணக்கு வழக்குகளை அவராகவே கரெக்டாக பார்த்துக் கொள்வாராம். அவருக்கு என்று தனியாக அக்கவுண்டன்ட் என்று எல்லாம் ஆள் கிடையாது. எல்லா கணக்கு வழக்குகளையும் அவரே சரிபார்த்து, வருமான வரியையும் சரியாக செலுத்தி விடுவாராம்.

Also Read:விடாமுயற்சிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய லைக்கா.. 2வது இடத்திற்கு முன்னேறிய அஜித்

அதனால் தான் இதுவரை நடிகர் அஜித்குமார் எந்த வருமான வரி சிக்கலிலும் மாட்டிக் கொண்டதும் இல்லை. மேலும் இவர் பணம் வாங்கி விட்டார், ஏமாற்றிவிட்டார் என்று எந்த தயாரிப்பு நிறுவனமும் அஜித்தின் மீது குற்றம் சுமத்தியதும் இல்லை. அந்த அளவுக்கு பண விஷயத்தில் கரெக்டாக நடந்து கொள்ளும் அஜித் தனக்கு தெரிந்தவற்றை இளம் இயக்குனரான வினோத்திற்கும் அறிவுரையாக சொல்லி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு அஜித்குமார் தன்னுடைய அம்மாவின் பெயரில் ஆரம்பித்த டிரஸ்ட் ஒன்றிற்கு ரசிகர்கள் கேட்காமலேயே அதிக அளவில் பணம் போட்டதால், தானாகவே முன்வந்து அந்த டிரஸ்டை மூடி இருக்கிறார். எந்த பேராசையும் இல்லாமல் அஜித் செய்த இந்த விஷயம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் தன் சம்பாதிக்கும் சொந்த காசிலும் கூட கரெக்டாக தன்னுடைய கடமைகளை செய்து வருகிறார் அஜித்.

Also Read:95 கிலோ எடையின் சீக்ரெட்.. அஜித்துக்கு தலைவலியாக இருக்கும் பிரச்சனை

 

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்