ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சினிமா, சூட்டிங் எல்லாம் அப்புறம் தான்.. கேட்காமலேயே இறந்து போன நண்பரின் மனைவிக்கு அஜித் செய்த உதவி

Ajithkumar – Vidamuyarchi: நடிகர் அஜித்குமார் தற்போது துபாயில் உள்ள அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக சென்று இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு அஜித்தின் பட வேலைகள் ஆரம்பமாகி இருக்கிறது. விடாமுயற்சி அப்டேட் எப்போ வரும் என அவருடைய ரசிகர்களும் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த மாதம் முதலில் இருந்து சூட்டிங் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அஜித் எப்போதுமே சினிமா மற்றும் வேலை என்பதை தாண்டி தனக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். அதைப் போல தான் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்திலும் கூட. விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு வேலைகள் ரொம்பவும் காலதாமதமாக அமைந்திருக்கிறது. அப்படி இருந்த போதிலும் தன்னுடைய இறந்த நண்பரின் மனைவிக்காக படப்பிடிப்பு லேட் ஆனாலும் பரவாயில்லை என உதவி செய்திருக்கிறார்.

விடாமுயற்சி படத்திற்காக பட குழு மொத்தமும் துபாய்க்கு சென்றிருந்தது. ஒரு வாரமாக படபிடிப்பு வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் காலமாகிவிட்டார். மிலன் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர் அஜித்குமாரின் நெருங்கிய நண்பரும் கூட.

மிலன் இறந்ததும் படத்தின் கலை இயக்குனராக யாரை நியமிப்பது என படக் குழு திட்டமிட்டுக் கொண்டிருந்தது. அஜித் அப்பொழுது வெளியில் இருந்து யாரும் வேண்டாம் மறைந்த மிலனின் மனைவி மரியா மெர்லினை இந்த படத்திற்கு கலை இயக்குனராக போடுங்கள் என பரிந்துரை செய்திருக்கிறார். நண்பரின் மனைவி என்பதை தாண்டி மரியா ஃபேஷன் டெக்னாலஜி படித்திருக்கிறாராம்.

மரியா மெர்லின் விடாமுயற்சி படத்திற்கு கலை இயக்குனராக வேலை செய்வதற்கு துபாய் செல்ல வேண்டும். இப்படி வேலை நிமித்தமாக வெளிநாடு செல்பவர்களுக்கு வேலைக்கான அனுமதிப்புக்கான கார்டு கொடுக்கப்படும். மரியாவிடம் அந்த கார்டு இல்லையாம். அஜித் அவருக்கு அந்த கார்டை வாங்கி கொடுக்க எல்லா விதமான முயற்சிகளையும் செய்திருக்கிறாராம்.
.
இதுவரை சினிமாவில் பணியாற்றியவர்கள் பல பேர் படப்பிடிப்பின் போது உயிரிழந்திருக்கிறார்கள் அந்த பட குழு பொருளாதார உதவியைத் தான் முடிந்த அளவுக்கு அந்த குடும்பத்திற்கு செய்திருக்கிறார்கள். ஆனால் நடிகர் அஜித் மறைந்த மிலன் மனைவிக்கு எதிர்காலத்தையே உருவாக்கி கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவருடைய மனைவிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

Trending News