20 வருடங்களாக முருகதாஸை ஒதுக்கி வைத்துள்ள அஜித்.. பின்னணியில் இருக்கும் சம்பவம்

அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா திரைப்படத்திற்கு உண்டு. அந்த படத்திற்கு முன்பு சில தோல்விகளால் துவண்டு போயிருந்த அஜித்துக்கு இப்படம் மிகப்பெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்தப் படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் மற்றும் அஜித்தின் கூட்டணி வெற்றி கூட்டணி ஆகவே பார்க்கப்பட்டது. அந்தப் படத்தை தொடர்ந்து முருகதாஸ், அஜித்திடம் கஜினி படத்தின் கதையை கூறி இருக்கிறார். அந்த கதை ரொம்ப பிடித்து போனதால் அஜித் கட்டாயம் நாம் சேர்ந்து செய்யலாம் என்று கூறி முருகதாஸை சில காலங்கள் வெயிட் பண்ண சொல்லி இருக்கிறார்.

Also read: கேட்டாலே மிரளுது, தரமான இரண்டு டைட்டிலை லாக் செய்த அஜித்.. அக்டோபர் 2-ஐ குறி வைக்கும் ஏகே 61

ஆனால் அஜித் சொன்னபடி காத்திருக்க முடியாத முருகதாஸ் உடனே அந்த கதையை சூர்யாவிடம் சென்று கூறி இருக்கிறார். சூர்யாவுக்கும் அந்த கதை பிடித்துப் போனதால் உடனே நடிப்பதற்கு சம்மதம் கூறி இருக்கிறார். அதன் பிறகு தான் சூர்யா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் அந்த திரைப்படம் உருவாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

நாம் காத்திருக்க சொல்லியும் ஒரு வார்த்தை கூட கூறாமல் வேறு நடிகரை வைத்து படம் இயக்கி விட்டாரே என்ற கோபம்தான் அஜித்துக்கு இப்போது வரை இருக்கிறது. அதனால் தான் அவர் இனிமேல் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்தாராம்.

Also read: விஜய்யை தூக்கிக் கொண்டாடும் போனி கபூர்.. விஷயத்தைக் கேள்விப்பட்டு கடுப்பான அஜித்

அதன் பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் கூட அஜித்திற்கு அந்த கோபம் குறையாமல் இருக்கிறது. தற்போது பல இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வரும் அஜித் முருகதாஸ் இயக்கத்தில் மட்டும் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு முருகதாஸ் அஜித்தை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் அஜித் பிடிவாதமாக இருந்து வருகிறார். இதுதான் அவர்களின் கூட்டணி இதுவரை இணையாததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. ஒருவகையில் அஜித்தின் கோபம் நியாயமானது தான் என்று அவருடைய ரசிகர்கள் இந்த சம்பவம் குறித்து பேசி வருகின்றனர்.

Also read: அஜித் விஷயத்தில் மூக்க நுழைக்காதிங்க.. விஜய் போட்ட கண்டிஷன்