விஜய் ரூட்டில் போகும் அஜித்.. உங்கள மாதிரி ஆளுங்க இப்படி பண்ணா எப்படி பாஸ்

Ajithkumar: நீங்களே இப்படி பண்ணா எப்படி என்று பெரிய இடத்துல இருக்குறவங்க ஏதாவது ஒரு விஷயம் தடுமாறும் போது கேள்வி வரும். அந்தக் கேள்விதான் இப்போ விஜய் மற்றும் அஜித் மேல வந்திருக்கு.

கடந்த 20 ஆண்டு கால தமிழ் சினிமா என்பது அஜித், விஜய் என்ற இரு பெரும் துருவங்களை மையப்படுத்தி தான் இருந்தது. இப்போ விஜய் சினிமாவில் இருந்து விலகுவது ஒரு பெரிய வெற்றிடம். அந்த வெற்றிடத்தை அஜித் உபயோகப்படுத்திக் கொள்கிறாரோ என்ற சந்தேகம் இப்ப எழுந்திருக்கு.

அஜித்தை பொறுத்த வரைக்கும் சினிமாவை காசு சம்பாதிக்கும் இடமாக பார்க்க மாட்டார். நிறைய பேருக்கு பட வாய்ப்பு கொடுத்து உதவி எல்லாம் செஞ்சி இருக்காரு. ஆனா இப்போ முக்கியமா ஒரு விஷயத்துல தடுமாறி இருக்காரு.

விடாமுயற்சி படத்துக்கு பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். குட் பேட் அக்லி என தலைப்பிடப்பட்டு இந்த படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த படத்தை மைத்ரீ மூவிஸ் தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தை முதலில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தான் தயாரிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ நிறுவனத்திடம் கைமாறி இருக்கிறது. இதற்கு முழு காரணம் நடிகர் அஜித்குமார் தான்.

விஜய் ரூட்டில் போகும் அஜித்

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அஜித்துக்கு இந்த படத்திற்காக 145 கோடி சம்பளமாக பேசியிருக்கிறார். ஆனால் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவிஸ் அதை விட 20 கோடி சம்பளம் அதிகமாக பேசியிருக்கு. அதனாலதான் அஜித் அந்த நிறுவனத்துக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

20 கோடிக்காக தமிழ் தயாரிப்பாளரை கழட்டிவிட்டு, தெலுங்கு தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அஜித். தளபதி விஜய் கூட இதே தப்பை தான் திரும்பத் திரும்ப செய்கிறார். நன்றாக வளர்ந்த ஹீரோக்கள் அவர்களை வளர்த்த தமிழ் சினிமாவை சார்ந்தவர்களுக்காக இதுபோன்ற விஷயங்களை அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வதில் எந்த தப்பும் கிடையாது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை