விஜய் கேட்டும் விட்டுக் கொடுக்காத அஜித்.. 23 வருடங்களுக்குப் பிறகு உண்மையை உடைத்த இயக்குனர்

அந்த காலத்திலிருந்தே சினிமாவில் இரு பெரும் நடிகர்களுக்கிடையே ஒரு போட்டி இருக்கத் தான் செய்கிறது. எம்ஜிஆர்-சிவாஜியில் ஆரம்பித்து ரஜினி-கமல், விஜய்-அஜித் என இந்த பட்டியல் இப்போதும் நீண்டு கொண்டே போகிறது. அதிலும் இப்போது அஜித், விஜய் இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.

தனிப்பட்ட முறையில் இவர்கள் நண்பர்களாக இருந்தாலும் தொழில் என்று வந்துவிட்டால் எதிரும், புதிருமாக தான் இருக்கிறார்கள். பல வருடங்களாக இந்த கதை தொடர்கதையாகத் தான் இருக்கிறது. அந்த வகையில் விஜய் கேட்டும் அஜித் விட்டுக் கொடுக்க மறுத்த சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: அவசர அவசரமாய் விஜய் சந்தித்த 3 தயாரிப்பாளர்கள்.. கடைசி தடவை வார்னிங் கொடுத்த தளபதி

இந்த உண்மையை 23 வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் ராஜகுமாரன் போட்டு உடைத்திருக்கிறார். அதாவது இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் நீ வருவாய் என திரைப்படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் சிறந்த திரைக்கதைக்காக அவர் தமிழக அரசின் விருதையும் பெற்றிருந்தார்.

அந்த வகையில் இப்படத்தில் முதலில் பார்த்திபன் நடித்த கேரக்டரில் விஜய் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அப்போது அவர் பல திரைப்படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே அந்த கேரக்டரில் நடிப்பதற்கு ராஜகுமாரன் அஜித்திடம் பேசி சம்மதம் வாங்கி இருந்தார்.

Also read: விஜய்க்கு தம்பியாக நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட குட்டி பார்த்திபன்.. அதனாலயே காணாமல் போன பரிதாபம்

அதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர் அஜித்திடம் நீங்கள் மெயின் ரோல் பண்ணுங்கள் விஜய் கெஸ்ட் ரோல் பண்ணட்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு முடியவே முடியாது என்று அஜித் மறுத்து விட்டாராம். ஏனென்றால் அந்த மெயின் ரோலில் ஹீரோயின் ஹீரோவை கடைசிவரை வேண்டாம் என்று உதாசீனப்படுத்துவார்.

அதனால் சென்டிமென்ட்டாக யோசித்த அஜித் எப்படி அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க முடியும். அது தவறாக போய்விடும், நான் கெஸ்ட் ரோலில் தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். அதன் காரணமாகவே விஜய் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இந்த உண்மையை 23 வருடங்கள் கழித்து ராஜகுமாரன் வெளிப்படுத்தி இருப்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Also read: விஜய்யுடன் நடித்து முன்னேற துடித்த வாரிசு நடிகர்.. 10 நிமிட காட்சியோடு துரத்தி விட்ட லோகேஷ்

- Advertisement -