நம்ப வைத்து மோசம் செய்த அஜித்.. பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவிடம் தஞ்சமடைந்த விக்னேஷ் சிவன்

நாளுக்கு நாள் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை பற்றிய விவாதங்கள் தான் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இப்படத்தை தற்போது மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகி இருந்தாலும் இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவராதது அனைவரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது. இது ஒரு புறம் இருக்க அஜித்தால் நிராகரிக்கப்பட்ட விக்னேஷ் சிவன் வீட்டிலேயே முடங்கி விட்டாராம்.

அஜித்தை இயக்க போகிறோம் என்று மிகப்பெரிய கனவுடன் இருந்த விக்கி தற்போது வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு சோகத்தில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து தன் கணவருக்காக நயன்தாரா விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன்படி அஜித்தை வைத்து இயக்க இருந்த கதையில் தற்போது விஜய் சேதுபதி மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து பிரதீப் ரங்கநாதனும் நடிக்க இருக்கிறார்.

Also read: இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பாக்ஸ் ஆபிஸை மிரட்டி விட்ட 5 படங்கள்.. பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பதான்

லவ் டுடே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்ட பிரதீப்புக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் விக்னேஷ் சிவன் இந்த இரண்டு ஹீரோக்களையும் வைத்து படம் எடுக்க தயார் நிலையில் இருக்கிறார். இப்படி அனைத்தும் சரியாக இருந்தாலும் தயாரிப்பாளர் யார் என்பது தான் கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் தற்போது அதற்கும் ஒரு விடிவு காலம் வந்துள்ளது. அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார். விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் கமல் இப்போது விக்னேஷ் சிவனுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

Also read: 20 கோடி வாங்கிட்டு டகால்டி கொடுத்த நயன்தாரா.. அடி மேல அடி மேல அடி வாங்கும் ஜோடிகள்

ஏனென்றால் அஜித்தை நம்பி மோசம் போய் விட்டோமே என்ற விரக்தியில் இருந்த அவர் ஏதாவது ஒரு நல்லது நடக்காதா என்று எதிர்பார்த்து வந்தார். கணவரின் மனதை புரிந்து கொண்ட நயன்தாரா தான் இப்படி ஒரு வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். மேலும் கமலிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது இந்த கூட்டணியை உறுதி செய்து இருக்கிறார்.

அந்த வகையில் அஜித்தால் தூக்கி எறியப்பட்ட விக்னேஷ் சிவன் கமலை தஞ்சம் அடைந்திருக்கிறார். இதன் மூலம் கமல் அஜித்துக்கு எதிராக செயல்படுகிறார் என்ற ஒரு பேச்சும் கிளம்பியுள்ளது. எது எப்படி இருந்தாலும் சோர்ந்து போயிருந்த விக்னேஷ் சிவனுக்கு பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவாக மிரட்டி வரும் உலக நாயகன் மிகப்பெரும் வாய்ப்பை கொடுத்திருப்பது நிச்சயம் பாராட்ட வேண்டியதுதான்.

Also read: அட்வான்ஸை திருப்பி வாங்கிய தயாரிப்பாளர்.. விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட அவமானம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்