இவ்வளவு கஷ்டத்திலும் எனக்கென்னன்னு வெளிநாடு கிளம்பிய அஜித்.. தயாரிப்பாளர் கொடுக்கும் டார்ச்சர்

Ajith went abroad: அஜித் செய்வது இப்போது கொஞ்சம் கூட சரியில்லை. மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் நிலைகுலைந்து இருக்கும் சமயத்தில், அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் எனக்கென்னனு அஜித் அவருடைய வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஹிந்தி நடிகர் அமீர்கான் வெள்ளத்தில் சிக்கியதால் மீட்பு படையினரால் மீட்கப்பட்ட அவரை, பாதுகாப்பாக கமிட்டி ஹாலில் தங்க வைக்க அஜித் ஏற்பாடு செய்துள்ளார். பாலிவுட் நடிகருக்கு இறங்கிய மனசு தமிழ் மக்களுக்கு இறங்காமல் போனது ஏன் என்று ரசிகர்கள் உட்பட திரை பிரபலங்கள் பலரும் கொந்தளிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஓய்வில் இருந்த தல அஜித், தற்போது மீண்டும் சென்னையில் இருந்து அஜர்பைஜான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. துபாய் உள்ளிட்ட பிற நாடுகளிலும் விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

Also Read: அஜித்துடன் சண்டை முத்தியதால் இப்ப வர ஒன்று சேராத 4 பிரபலங்கள்.. 21 வருடங்களாக ஓடாத வடிவேலு

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிக்காக அஜித் அஜர்பைஜான் சென்று இருக்கிறார். ஒரே ஷெட்யூலில் 70 நாட்கள் தீவிரமாக இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். விடாமுயற்சி படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இவர் ஏற்கனவே அஜித்தின் ஆரம்பம் படத்தில் அவருடன் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சில ஸ்டைலான ரோட் சேஸ் சீக்வென்ஸ் அடங்கிய ஆக்ஷன் திரில்லர் காட்சிகளும் இடம்பெறுகிறது. இந்த படத்தை வரும் 2024-ம் ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய விடாமுயற்சி பட குழு தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கும்  அஜித்தின் விடாமுயற்சி படத்தை  சீக்கிரம் முடிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஸ்டிட் ஆக சொல்லிவிட்டனர். ஏனென்றால் டைட்டிலை ரிலீஸ் செய்வதற்கே பல மாதங்கள் எடுத்துக் கொண்டனர். அதனால்தான் இப்போது அஜித் லைக்கா கொடுக்கிற டார்ச்சலால் அவசர அவசரமாக  படப்பிடிப்பிற்காக வெளிநாடு கிளம்பி போகிறார்.

வெளிநாடு கிளம்பிய அஜித்

ajith-cinemapettai9
ajith-cinemapettai9

Also Read: பாலாவிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிய அஜித்.. 2 முறை திட்டம் போட்டு பல்பு வாங்கிய சைக்கோ