அஜித் இப்படி பண்றது சுத்தமா பிடிக்கல.. பிரபல தயாரிப்பாளரின் கணீர் பேச்சு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சினிமாவிற்கு எந்த பின்புலமும் இல்லாமல் உச்சத்தைத் தொட்ட அல்டிமேட் ஸ்டார் அஜித் குறித்த பரபரப்பான செய்தியை பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.

இவர் 80 மற்றும் 90களில் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து ரசிகர்களுக்கு வழங்கிய பெருமைக்குரியவர், இவர் தற்போது பேட்டி ஒன்றில், ‘அஜித் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களுக்குத் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற தொடர்ந்து இரண்டு படங்களை கொடுத்துள்ளார்.

சினிமா துறையில் நல்ல நிலையில் இருக்கும் போனி கபூருக்கு ஒரு படம் மட்டும் கொடுத்துவிட்டு, தற்பொழுது பொருளாதாரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு மற்றொரு படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுக்கலாமே!’ என்ற கருத்தை பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் பகிர்ந்துள்ளார்.

k-rajan-cinemapettai
k-rajan-cinemapettai

ஏனென்றால் அஜித் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த அமராவதி படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் மற்றும் சின்ன சின்ன தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் ஹிந்தி, மலையாள டாப் ஹீரோக்கள் ஒரு சிலர் சின்ன சின்ன தயாரிப்பாளர்கள் 10 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றன.

அதேபோல் தமிழ் ஹீரோக்களும் முன்வர வேண்டும் என்பதே கே ராஜன் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்