நாளை விசாகப்பட்டினத்தில் நடிகர் விஜய்யும் அஜித்தும் சந்திக்க இருக்கின்றனர். இது அவர்களது ரசிகர்கள் இடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
நடிகர் அஜித்துக்கும் விஜய்க்கும் படங்கள் ரீதியாக போட்டிகள் இருந்தாலும் இவர்கள் இருவருமே நாகரீகமான நட்பினை பாராட்ட தவறியதே இல்லை. அவர்களது ரசிகர்களிடையே நடக்கும் கருத்து மோதல்களையும் இருவருவரும் ஆதரித்தது இல்லை.
நடிகர் விஜய்யும், அஜித்தும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் ஒரு படப்பிடிப்பின் போது சந்தித்து இருக்கின்றனர். மங்காத்தா மற்றும் வேலாயுதம் படப்பிடிப்பு ஒரே செட்டில் நடந்த போது இருவரும் சந்தித்தனர்.
அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரண்டானது. இன்றளவும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. பீஸ்ட் திரைப்பட படப்பிடிப்பும் வலிமை படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்றது. இருவரும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்திக்கவில்லை.
நடிகர் விஜய் ‘தேவ்’ பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அஜித்தும் வினோத் இயக்கத்தில் AK 61 ல் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் விசாகபட்டணத்தில் நடந்து வரும் நிலையில் அஜித்தும் விஜய்யும் நாளை நேரில் சந்திக்க உள்ளனர்.
ரசிகர்களின் பலநாள் கனவு நிறைவேறும் என்று கோலிவுட் வட்டாரம் நம்புகிறது. இது மட்டும் நடந்து புகைப்படம் வெளி வந்தால் சமூக வலைத்தளமே கொண்டாடும்.