அஜித் கூறியும் கேட்காத போனி கபூர்.. வலிமை படத்தை தள்ளிப் போட்ட காரணம்

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள நடிகர் அஜித் குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்கள் 3 வருடமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாக இருந்த வலிமை திரைப்படம் தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் காரணத்தால் தள்ளி போய் உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் வலிமை படத்தை தற்போது வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கூடிய விரைவில் படத்தை வெளியிடுவோம் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் பொங்கலுக்கு வலிமை படத்தை தெறிக்க விடலாம் என்று காத்திருந்த அஜித்தின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர்.

வலிமை திரைப்படத்தின் வெளியீடு குறித்து நேற்று வினியோகஸ்தர்கள் மதுரை அன்பு உட்பட பலரும் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது அவர்கள் அனைவரும் இப்போது படத்தை வெளியிடுவது அவ்வளவு லாபத்தை கொடுக்காது என்று கூறியுள்ளனர்.

மேலும் அஜித் வலிமை படத்தை குறித்த தேதியில் வெளியிடலாம் என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். ஆனால் பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் பட வெளியிடை தள்ளிப் போட சொல்லி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக போனிகபூர் வலிமை திரைப்படத்தை கொரோனா பரவல் குறைந்து சற்று சகஜ நிலை திரும்பிய பிறகு வெளியிடலாம் என்று முடிவெடுத்துள்ளார். மேலும் அவர் வலிமை படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து பிப்ரவரிக்கு மேல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை