தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் வலிமை படத்திற்கு பிறகு அடுத்ததாக நடிக்கவிருக்கும் மூன்று படங்களின் இயக்குனர்கள் பற்றிய தகவல்களை அஜித் வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளன.
அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படம் 95 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து பாக்கி கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் அதற்கான அனுமதி கிடைக்காமல் படக்குழுவினர் தடுமாறி வருகின்றனர்.
செட் போட்டு எடுக்கலாமா எனவும் யோசித்து வருகின்றனர். இதற்கிடையில் தல 61 படத்தையும் வாய்ப்பையும் வினோத்துக்கு கொடுத்துள்ளார் தல அஜித். இந்த தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
அதனைத் தொடர்ந்து தல 62 படத்தை சூர்யாவுக்கு சூரரைப் போற்று எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்த சுதா கொங்கராவுக்கு கொடுத்துள்ளாராம். அஜித்தின் வழக்கமான பாணியிலிருந்து இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என கூறினார். இதற்கான பணிகளையும் சுதா கொங்கரா தொடங்கிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சிறுத்தை சிவாவுக்கு தல 63 வாய்ப்பு கொடுக்க முடிவு எடுத்துள்ளாராம் தல அஜித். வினோத் மற்றும் சுதா கொங்கரா ஆகியோரின் படங்களை முடித்த பிறகு சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் ஒரு பக்கா கமர்ஷியல் படம் உருவாக உள்ளதாம்.
எப்போதுமே அஜித் பற்றிய செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளி வருவதற்கு நாளாகும். ஆனால் அதற்கு முன்னரே அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகளை கசிய விட்டு விடுவார்கள். அந்த வகையில் இந்த செய்தி வெளியாகி தற்போது தல ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அஜித் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நினைத்ததை விட அதிக நாட்கள் இழுத்து விட்டதால் அடுத்தடுத்த படங்களை மிக வேகமாக முடித்து விட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார்.
