முக்கிய மாவட்டங்களை சூழ்ச்சி செய்து வளைத்துப் போட்ட உதயநிதி.. வாரிசு வசூலை சுக்குநூறாக்க போகும் அஜீத்

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளி வந்தால் கொலையில் முடியும் அளவிற்கு பிரச்சனைகள் ஏற்படும். இந்நிலையில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று வெளிவரும் என்று அறிவித்திருக்கிறார்கள். அண்மையில் வெளியான ரஞ்சிதாமே பாடல், போஸ்டர்கள் ரசிகர்களை மிகப் பெரிய எதிர்பார்ப்பில் ஈடுபடுத்தி உள்ளது. படத்திற்கு போட்டி இல்லாமல் வசூலை அள்ளி விடலாம் என்று நினைத்த நிலையில்.

தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள நடிகர் அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த வேளையில், வாரிசு திரைப்படத்தோடு துணிவு திரைப்படமும் மோத உள்ள செய்தி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

Also Read : அது நடந்தா துணிவு படம் ரிலீஸுக்கு முன்னரே 450 கோடி வசூலாகும்.. வாய்ப்பை உதாசீனப்படுத்தும் அஜித்

இதனிடையே துணிவு திரைப்படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மட்டுமே 70% திரையரங்கில் துணிவு திரைப்படம் வாங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் துணிவு திரைப்படத்தின் மார்க்கெட் எகிறி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் மேலும் சில மாவட்டங்களில் துணிவு திரைப்படத்தை விநியோகம் செய்யலாம் என உதயநிதி ஸ்டாலின் திட்டம் தீட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜய்யின் வாரிசு திரைபடத்தை காட்டிலும் அஜித்தின் துணிவு திரைப்படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் அதிகமாக வாங்கியுள்ளனர்.

Also Read : கேவலமான பாடல் வரிகள், சர்ச்சையில் சிக்கிய வாரிசு பட ரஞ்சிதமே.. தளபதி இதுதான் உங்க சமூக பொறுப்பா?

இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்கு 30% திரையரங்குகள் மட்டுமே கிடைத்திருப்பதால் மிகப்பெரிய அளவில் வசூல் பாதிக்கப்படும் கூறப்படுகிறது. அஜீத், விஜய்யின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ள நிலையில் பல மாவட்டங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்படும். இதனால் திரைப்படங்களையும் வெளியிடுவதில் பல சிக்கல்கள் உள்ளது.

இதனிடையே வாரிசு திரைப்படத்தின் அத்தனை மார்க்கெட்டையும் அஜித்தின் துணிவு திரைப்படம் வாங்கி உள்ளது. இதனால் படம் பட வசூல் ரீதியாகவும் பல சாதனைகளையும் செய்யும் என்று நினைத்த நிலையில் எதிர்பார்க்காத ஏமாற்றமாக மாறி உள்ளது விஜய்க்கு. வாரிசு திரைப்படத்தின் படக்குழுவினர் மற்றும் விநியோகஸ்தர்கள் இதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். படங்கள் ரிலீசாவதற்கு முன்பே போட்டிகள் ஆரம்பித்ததால் வெற்றியை நோக்கி இரு துருவ ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Also Read : குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அஜித்.. வெளிநாடுகளில் வியாபாரம் ஆகாத துணிவு, காரணம் இதுதானாம்

- Advertisement -