ஒரே ஒளிப்பதிவாளர் உடன் 5 முறை கூட்டணி வைத்த அஜித்.. விடாமுயற்சியிலும் விட்டுக் கொடுக்காத ஏகே

Ajith Favourite Cinematograper: பொதுவாக முன்னணி நடிகர்களாக இருக்கும் ஹீரோக்கள் நடிக்கக்கூடிய படங்களுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் அதிகமாக கவனம் செலுத்தி வெற்றி அடைவதற்கு மும்மரமாக வேலை பார்ப்பார்கள். இந்த விஷயத்தில் அஜித் எப்போதுமே ஒரு படி கீழே தான். அவருக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வார். இந்த படம் வெற்றியை தோல்வியோ, நடிக்கணும் நினைச்சுட்டாரு என்றால் கமிட்டாகி விடுவார்.

அந்த வகையில் அவருக்கு பிடித்தமான ஒரு கேரக்டர் இருக்குது என்றால் அவரை கூடவே கூட்டிட்டு வருவது போல் தொடர்ந்து படங்களில் அவர்களை தக்க வைத்துக் கொண்டு விடுவார். அதுபோல்தான் அஜித்திற்கு, ஒளிப்பதிவாளராக இருக்கும் நீரவ் ஷா கிரீடம் படத்தின் மூலம் பழக்கமாய் இருக்கிறார். அதன் மூலம் தொடர்ந்து அஜித் நடிக்கும் படங்களில் இவரையே ஒளிப்பதிவாளராக வேலை செய்ய வைத்திருக்கிறார்.

அப்படி நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித் நடித்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம். 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தில் இவர் தான் ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருக்கிறார். அந்த வகையில் இதில் வரும் காட்சிகளை வித்தியாசமான முறையில் காட்ட வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பண்ணி இருக்கிறார். அதிலும் நயன்தாரா மாடியிலிருந்து ஜம்ப் பண்ணி கார் மீது வரும் காட்சிகள் வித்தியாசமாக இருக்கும்.

அடுத்தபடியாக எச் வினோத் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை. இதில் ரொமான்ஸ் சீன் மற்றும் சீரியஸாக கோர்ட்டில் வாதாடும் காட்சிகளும் மிகவும் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கும். இதற்கு அடுத்து வலிமை படத்திலும் இவர் தான் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து துணிவு படத்தில் இவர்தான் கண்டிப்பாக வேண்டும் என்று அஜித் ரெகமெண்ட் பண்ணி ஒளிப்பதிவு பண்ண வைத்திருக்கிறார். அதற்கேற்ற மாதிரி இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் கேமரா மூலம் வித்தியாசமான ஆங்கிலே பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். முக்கியமாக அஜித் கூட்டாளிகளுடன் இருக்கும் இடத்தையும், கேரவானிலிருந்து செய்யும் அதிரடியாக காட்சிகளையும் அழகாக காட்டப்பட்டிருக்கும்.

இந்த வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலும் இவர்தான் வேண்டும் என்று தயாரிப்பாளிடம் அஜித் கேட்டிருக்கிறார். அதன்படியே இப்படத்திலும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இப்படி தொடர்ந்து அஜித்துடன் ஆறு படங்களுக்கும் மேல் பயணித்து வருகிறார். அதற்கெல்லாம் காரணம் அஜித் மனதில் இடம் பிடித்த ஒரே விஷயத்திற்காக மட்டுமே இந்த மாதிரி வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.