வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அஜித்துக்காக எழுதப்பட்ட பைக் ரேஸ் கதை.. விஜய்யிடம் சென்ற சூழ்ச்சி, வெளிப்படையாய் பேசிய இயக்குனர்

முழுக்க முழுக்க நடிகர் அஜித்தை மட்டுமே மனதில் வைத்து அவருக்காகவே எழுதப்பட்ட கதை, ஒன்று அவரிடம் சொல்ல படாமலே தளபதி விஜயிடம் சென்று வெற்றிப்படமாக மாறியுள்ளது. சமீபத்தில் மனம் திறந்து பேசிய அந்த திரைப்படத்தின் இயக்குனர் இந்த விஷயத்தை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் தனது சிறிய வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டாலும் அஜித் திரைப்படத்தில் அறிமுகமான புதிதில் தான் இவரும் நாயகனாக படங்கள் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்ப காலங்களில் அவரவர் போக்கில் அவர்கள் இருந்தாலும் பின்னர் . இவர்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. இவர்களுக்கென தனித்தனியாக ரசிகர்களும் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இன்று வரைக்கும் அதிகமாக போட்டிகளும் சண்டைகளும் வருவது அஜித் விஜய் ரசிகர்கள் இடையில்தான்.

இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் படிப்படியாக முன்னேறி வந்தாலும் நடிகர் விஜயை ஒப்பிடும்பொழுது இப்போதைக்கு அஜித்தின் படங்கள் பல சறுக்கல்களை சந்தித்து வருகின்றன, விஜயை போன்று அடுத்தடுத்த ஹிட் எதுவும் அமையவில்லை.

அஜித் வலிமை படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 61 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் உள்ளன. அதே போன்று விஜயும் தன்னுடைய பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அடுத்த படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் விஜய் படத்தின் இயக்குனர் ஒருவர் யாருக்கும் தெரியாத புதிய தகவல் ஒன்றை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். பொதுவாகவே ஒரு நடிகர்கள் நடிக்க மறுக்கும் கதை இன்னொரு நடிகர்களின் கைக்கு செல்வது உண்டு, அது வெற்றியும் அடைவதுண்டு. ஆனால் இந்த விஷயத்தில் அஜித்திற்காக எழுதப்பட்ட கதை அஜித்திற்கு சொல்லாமலேயே விஜய்யிடம் சென்றுள்ளது.

நடிகர் அஜித் ஒரு பைக் ரேசர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 2012ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்தில் அஜித் பைக் ரேஸ் போன்றே பைக் ஓட்டும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இதற்கு முன்பாகவே அஜித்திற்கு இப்படி ஒரு கதை ரெடி ஆகி இருக்கிறது, அதுதான் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டாக கொண்டாடப்பட்ட திருமலை திரைப்படம்.

இயக்குனர் ரமணா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் திருமலை. இதில் விஜய், ஜோதிகா, விவேக், கௌசல்யா, ரகுவரன் என பலரும் நடித்துள்ளனர். இதில் விஜய் பைக் மெக்கானிக் ஆக வருவார், அவருடைய அறிமுக காட்சியே பைக் ரேசிங் தான் மையமாகக் கொண்டிருக்கும் .

சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ரமணா கூறுகையில் இந்தப் கதை அஜித்திற்காக எழுதப்பட்ட கதை என்றும் இதை அஜித்திடம் சொல்ல விடாமல் சிலர் தடுத்துள்ளனர். பின்பு இந்த கதை நடிகர் விஜயிடம் சென்றுள்ளது. நடிகர் விஜய் நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது, இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் அஜீத் ரமணாவை கூப்பிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அந்த தருணத்தில்தான் ரமணா அந்த உண்மையை கூறி இருக்கிறார், அதாவது இந்த படம் உங்களுக்காக எழுதப்பட்டது என்று இது நடிகர் அஜித்திற்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என்னதான் விஜய் அஜித் ரசிகர்கள் மாறி மாறி சமூக தளத்தில் சண்டை போட்டுக் கொண்டாலும் அஜீத்தோ விஜய்யோ இதுவரைக்கும் ஒருவரை ஒருவர் எந்த ஒரு இடத்திலும் கொஞ்சம் கூட இழிவாக பேசியதோ , முகம் சுளித்ததோ கிடையாது. அவர்கள் இருவரும் நாகரீகமான நட்பை பாராட்டி கொண்டிருக்கும் பொழுது அவருடைய ரசிகர்கள் சமூக தளங்களில் சண்டையிட்டுக் கொள்வது இவர்கள் இருவருக்குமே பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது. இதை இவர்கள் இருவருமே அடுத்தடுத்த மேடையில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News