Actor Ajith: அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல் பல துறைகளிலும் தன்னுடைய கெத்தை காட்டி வருகிறார். அதில் அவருடைய பைக் ரேஸ் ஆர்வம் பற்றி அனைவருக்கும் தெரியும் அத்துடன் சேர்த்து துப்பாக்கி சுடுதல், ட்ரோன் விமானம் உருவாக்கியது என இவருக்கு இருக்கும் திறமைகளை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதன் காரணமாகவே இவர் மீது அனைத்து துறைகளில் இருப்பவர்களுக்கும் ஒரு தனி மரியாதை இருக்கிறது. அந்த வகையில் இவரைப் போன்று அவருடைய வாரிசும் விளையாட்டு துறையில் சாதனையாளராக இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.
கோல்ட் மெடலை தட்டி தூக்கிய குட்டி அஜித்
அது குறித்த புகைப்படம் இப்போது வெளியாகி ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. அதாவது அஜித்தின் மகன் ஆத்விக் கால் பந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இது பற்றி ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது கிராஸ் ரூட் அகாடமி நடத்திய போட்டியில் இவர் தங்கப் பதக்கத்தை வென்றிருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.
மேலும் அந்தப் போட்டியில் சீறிப்பாயும் சிங்கம் போன்று அவர் விளையாடியது, தன் அம்மா ஷாலினியுடன் இருப்பது, மெடலை பிடித்தபடி கெத்தாக போஸ் கொடுப்பது என அவருடைய போட்டோக்கள் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து வருகிறது. இதைப் பார்த்த அனைவரும் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என ஆர்ப்பரித்து வருகின்றனர்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா
அது மட்டுமின்றி நடிகரின் வாரிசு என்பதால் அதே துறையை தேர்ந்தெடுக்காமல் தன் மகனை அஜித் சாதனையாளராக மாற்றி இருப்பதும் பாராட்டப்பட்டு வருகிறது. ஏனென்றால் டாப் ஹீரோக்களின் மகன்கள் தற்போது வாரிசு நடிகர்களாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதில் விஜய்யின் மகன் விதிவிலக்காக இயக்குனராக அடியெடுத்து வைத்தாலும் விரைவில் அவரும் ஹீரோவாக மாறுவார் என்று கூறப்படுகின்றது. இந்த சூழலில் அஜித்தின் வாரிசு விளையாட்டு துறையில் இவ்வளவு ஆர்வமாக இருப்பது வரவேற்கப்பட்டும் வருகிறது. அதே போல் ஷாலினியும் விளையாட்டில் ஆர்வமாக இருக்கக்கூடியவர் தான். இப்படி அஜித்தின் குடும்பம் பல விஷயங்களில் திறமையானவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.