இரட்டை இலை போல் 2 விரல்களை காட்டும் அஜித்.. யானை போல் மதம் பிடித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

Ajith: ரஜினி, விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் மட்டும் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி கொண்டே வருகிறது. ஆனால் அஜித் படம் மட்டும் வருஷத்துக்கு ஒரு படம் அல்லது ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் என்று அத்திப்பூத்தாற்போல் எட்டிப் பார்க்கிறது.

அதிலும் ஏதாவது ஒரு படம் தான் ஹிட் ஆகிறது. இல்லை என்றால் ரசிகர்களை திருப்தி படுத்தாமல் பெய்லியர் ஆகிவிடுகிறது. இப்படி ரெண்டு கெட்ட நிலைமையில் தான் அஜித் படம் ஓடிக் கொண்டு வருகிறது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எனக்கு என்ன தேவையோ அது மட்டும் தான் என்னுடைய கோரிக்கை என்பது போல் கரராக இருந்து வருகிறார்.

பொதுவாக அஜித் தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளர்களை ஒரு வித்தியாசமான முறையில் தேர்வு செய்வார். அதாவது ஆரம்பத்தில் எந்தவித கார்ப்பரேட் கம்பெனிக்கும் படம் நடித்து கொடுக்க மாட்டேன் என்று அவர்களை ஒதுக்கியே வைத்திருந்தார்.

ஆனால் தற்போது அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படம் நடித்துக் கொடுக்கும் வகையில் இறங்கி விட்டார். ஏனென்றால் அவர்களின் கூட்டணியில் நடித்தால்தான் அஜித் எதிர்பார்த்தபடி கல்லா கட்ட முடியும். இவர்களால் மட்டும் தான் அஜித் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடிகிறது.

கிடைத்த கேப்பில் கிடா வெட்டும் அஜித்

இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தும் வகையில் 130, 150 மற்றும் 170 கோடி என்று சம்பளத்தை வாங்கிக் கொண்டு வந்தார். ஆனால் தற்போது இவரிடம் போகக்கூடிய தயாரிப்பாளர்களிடம் இரட்டை இலை போல் இரண்டு விரல்களை காட்டி வருகிறாராம். அதற்கு என்ன அர்த்தம் என்றால் 200 கோடி சம்பளம் வேண்டுமாம்.

இதைக் கேள்விப்பட்ட ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் இவர் கேட்கக்கூடிய சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி இவருடைய நடிப்பின் மூலம் வசூல் கிடைக்க வேண்டும். ஆனால் அது எதுவும் வராதபோது இவர் எந்த தைரியத்தில் இந்த மாதிரி சம்பளத்தை டிமாண்ட் பண்ணுகிறார் என்று ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் மதம் பிடித்த யானை போல் ஓடுகிறார்களாம்.

ஒருவேளை இப்பொழுது விஜய் அரசியலில் பிஸியாகி விட்டதால் அந்த இடத்தை நிரப்புவதற்கு இவரை தவிர வேறு ஆள் இல்லாததால் இந்த மாதிரி டிமாண்ட் பண்ணுகிறார் போல. இதை தான் சொல்லுவாங்க கிடைச்ச கேப்பில் கிடா வெட்டணும்னு. அதை தான் அஜித்தும் ஃபாலோ பண்ணி வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்