சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மொத்தத்தையும் வாரி சுருட்டி கொண்ட அஜித்.. Ak63-யால் விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்

AK63-Ajith: பல மாதங்களாக இழுத்து அடித்து கொண்டிருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே அஜித் தன்னுடைய அடுத்த படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதாவது சமீபத்தில் ஏகே 63 படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகி இருந்தது.

சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியிருந்த மார்க் ஆண்டனி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். இப்போது ஏகே 63 படத்தின் வாய்ப்பு இவருக்கு தான் கிடைத்திருக்கிறது.

மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விடாமுயற்சி படத்திற்கு 105 கோடி அஜித் சம்பளம் வாங்கிய நிலையில் ஏகே 63 படத்தில் அவருடைய சம்பளம் தலையை சுற்ற வைக்கிறது. ஏனென்றால் இப்போது ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் அடுத்த படத்தில் 200 கோடி சம்பளத்தை தொட்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு இணையாக ஈடு கொடுக்க வேண்டும் என்பதற்காக அஜித்தின் சம்பளமும் இப்போது அதிகமாக உயர்ந்து இருக்கிறது. அதன்படி ஏகே 63 படத்திற்கு 163 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் பட்ஜெட் என்பது 225 கோடி தானம். ஆகையால் அஜித்தின் சம்பளம் போக மீதம் 62 கோடி மட்டும் தான் கைவசம் இருக்கும்.

மேலும் அஜித் போன்ற பெரிய நடிகரின் படத்தை எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த பட்ஜெட்டில் எடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. அதோடு மட்டுமல்லாமல் படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர்களின் சம்பளம் மேக்கிங் இது தவிர இதர செலவுகள் என பெரிய தொகை தேவைப்படும்.

ஆகையால் அஜித்தின் சம்பளம் போக குறைந்தபட்சம் 100 கோடியாவது செலவாகும். இதனால் என்ன செய்வதென்று ஏகே 63 தயாரிப்பாளர் விழி பிதுங்கி நிற்கிறாராம். எப்போதுமே அஜித் தயாரிப்பாளர்களை பற்றி சற்று யோசிக்கும் நிலையில் இந்த முறை அதிரடியாக சம்பளத்தை உயர்த்தியது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

Trending News