அஜித்துக்கு தெரியாமல் மச்சினிச்சி செய்த சித்து வேலை.. சோஷியல் மீடியாவை அதிர வைத்த சம்பவம்

அஜித் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கமிட்டாகி வருகிறார். வலிமை திரைப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளி விழுந்து விட்டதால் அவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். படங்களில் அவர் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறாரோ அதே போல தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் அவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வெளியே செல்வது போன்ற பல போட்டோக்கள் மீடியாவில் அவ்வப்போது வெளியாகும். இப்படி தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் குடும்பத்துடன் எங்காவது வெளியில் சென்று பொழுதைக் கழித்து வரும் அஜீத் தற்போது தன் மனைவியுடன் ஒரு பார்ட்டிக்கு சென்று உள்ளார்.

அங்கு அவர் தன் மனைவியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அஜித் அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர்.

அஜித் தன் மனைவியின் மீது எவ்வளவு காதல் உடன் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் அவர்களின் ரொமான்டிக் போட்டோ பலருக்கும் வியப்பையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

ஏனென்றால் திருமணமாகி இவ்வளவு வருடங்கள் கழிந்த பின்னும் இந்த தம்பதிகள் அதே காதலுடன் இருப்பது பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்து வருகிறது. இந்த புகைப்படத்தை ஷாலினியின் தங்கையும், அஜித்தின் மச்சினிச்சியுமான ஷாம்லி, அஜித்துக்கு தெரியாமல் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து உள்ளார். தற்போது எந்த படங்களிலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் அவர் தனது அக்கா குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை அள்ளிக் கொடுக்கின்றனர்.