வேர்ல்ட் டூரை தள்ளி வைத்த அஜித்.. லியோ காட்டிய பயத்தால் விரைவில் வெளிவர உள்ள ஏகே 62 அப்டேட்

அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ்திருமேனி தான் இயக்கப் போகிறார் என்பது உறுதியானாலும் அதற்கான அறிவிப்பு மட்டும் இழுத்தடித்து வருகிறது. இப்போது மகிழ்திருமேனி தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம். இதற்காக 5 ஸ்டார் ஹோட்டலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் படக்குழு மிகப்பெரிய குழப்பத்தில் இருந்து வந்தனர். ஏனென்றால் அஜித் ஒரு படம் முடிந்த உடனே சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதுமட்டுமின்றி ஏகே 62 படத்தை முடித்த கையோடு பைக்கில் வேர்ல்ட் டூர் செல்ல உள்ளார்.

Also Read : கவனமாக காய் நகர்த்தும் அஜித்.. ஏகே 62 தாமதமாக வெளிவர இது தான் காரணம்

இதனால் படக்குழு குறித்த நேரத்தில் எப்படி படத்தை எடுத்து முடிப்பது என்ற யோசனையில் இருந்து வந்தனர். ஆனால் அஜித் படக்குழுவுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லி உள்ளார். அதாவது படத்தை நன்றாக எடுங்கள் நான் பிறகு வேர்ல்ட் டூர் செல்கிறேன் அதனால் இப்போது பயப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் மகிழ்திருமேனி மிகுந்த மகிழ்ச்சி உடன் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டாராம். அதுமட்டுமின்றி லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த பயத்தினால் அஜித் ஒரு முடிவு எடுத்துள்ளார்.

Also Read : அஜித் படத்தின் சீக்ரெட் கசிந்து விடும் என்பதால் கட்டளை போட்ட லைக்கா.. ஏகே 62 படத்திற்கு போட்ட பூஜை

அதாவது லியோ படம் போலவே ஏகே 62 படத்திற்கும் டைட்டில் வீடியோவை வெளியிடலாம் என்று யோசனை கூறியுள்ளாராம். இதற்கான ஏற்பாடை தற்போது மகிழ்திருமேனி செய்து வருகிறாராம். மேலும் இன்னும் தாமதிக்காமல் விரைவில் படத்தின் அப்டேட் வெளியிடலாம் என்றும் அஜித் கூறியுள்ளாராம்.

ஆகையால் இந்த வாரத்திற்குள் ஏகே 62 படத்தின் டைட்டில் உடன் அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும் அஜித், மகிழ்திருமேனிக்காக வேர்ல்ட் டூரை தள்ளி போட்டு உள்ளதால் அவருக்கு தரமான வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இயக்குனர் செயல்பட்டு வருகிறார். கண்டிப்பாக வெறித்தனமாக ஏகே 62 அப்டேட் வெளியாக இருக்கிறது.

Also Read : ஏற்கனவே ஒர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. புது மருமகளுக்கு ரூட் போடும் ஏகே 62 படக்குழு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்