மே 1 செம ட்ரீட் காத்திருக்கு.. அஜித் பிறந்தநாளில் கில்லிக்கு போட்டியா ரீலிஸாகும் படம்

Actor Ajith : மே ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டாலும் அஜித் ரசிகர்களுக்கு அன்று தான் தீபாவளி. அன்றைய தினம் காலை முதலே இணையத்தை தெறிக்கவிடும் அளவுக்கு அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரது ரசிகர்கள் வெளிப்படுத்தும் வகையில் புகைப்படம் வெளியிட்டு வருவார்கள்.

மேலும் கடந்த முறை அஜித்தின் பிறந்தநாள் அன்று விடாமுயற்சி படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இந்த வருடமும் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்கும் வகையில் மூன்று அப்டேட் வெளியாக இருக்கிறது.

முதலாவதாக விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. இப்படத்தின் 75% படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளது.

மே ஒன்றாம் தேதி வெளியாகும் அஜித் பட அப்டேட்டுகள்

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் அடுத்த வருடம் 2024 இல் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகிறது.

ஆகையால் இந்தப் படத்தை பற்றிய தரமான அப்டேட்டும் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாக இருக்கிறது. மேலும் இப்போது விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸாகி தியேட்டரில் வசூல் வேட்டை செய்து வருகிறது. அதற்கு போட்டியாக அஜித்தின் படமும் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது.

வெங்கட் பிரபு மற்றும் அஜித் கூட்டணியில் உருவான மங்காத்தா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். அதுவரை அஜித்தை பார்த்திடாத வித்தியாசமான கேரக்டரில் வெங்கட் பிரபு காட்டி இருந்தார்.

இப்போது மங்காத்தா படம் தான் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆகையால் அன்றைய தினம் திருவிழா கோலம் போல தான் அஜித் ரசிகர்கள் இருக்க உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்