தலைக்கனத்தில் பாலாவையே மிஞ்சும் அஜித் பட இயக்குனர்.. படாதபாடு பட்டுவரும் படக்குழு

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் சேது படத்தை இயக்கியது மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் சக்கைப் போடு போட்டதையடுத்து, தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் நந்தா, விக்ரமின் பிதாமகன், அதர்வாவின் பரதேசி, ஆர்யாவின் நான் கடவுள் என இவர் இயக்கிய பல படங்களுக்கு தேசிய விருதுகள் அள்ளிக் கொடுக்கப்பட்டது. இவ்வளவு திறமை உள்ள இயக்குனர் பாலா எப்போதுமே அமைதியாக இருப்பவர். மிகவும் கோபப்பட கூடியவர்

திடீரென ஒருமை வார்த்தைகளை பயன்படுத்தி நடிகர்களை மரியாதைக் குறைவாக பேசுவது, மேலும் அடிப்பது,திட்டுவது என எல்லாமே பாலா செய்வார். இதன் காரணமாகவே அவர் படங்களில் நடிக்கும் நடிகர்கள் முதல் டெக்னீஷியன்கள் வரை சற்று பயந்துக்கொண்டே தான் நடிப்பார்கள். பாலாவுக்கு விவாகரத்தான நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வந்தார். அந்த படம் பாதியிலேயே நின்ற நிலையில், தற்போது இயக்குனர் பாலா இருக்கும் இடமே தெரியாமல் உள்ளார்.

Also Read: பாலா நிலைமை நமக்கும் வந்திடக் கூடாது.. வாடிவாசல் கூட்டணி பிளவா? பதறிய தயாரிப்பாளர், சூர்யா

இதனிடையே தற்போது பாலாவை போன்ற குணத்தில் வளர்ந்து வரும் இயக்குனர் ஒருவர் செயல்பட்டு வருவது தான் பலருக்கும் அதிர்ச்சியாகி உள்ளது. சதுரங்க வேட்டை திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஹெச்.வினோத், அஜித்தின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். வரும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள துணிவு பட ட்ரைலரில் அஜித்தை மாஸாக காண்பித்திருப்பர் ஹெச்.வினோத்.

அந்த படத்தின் படப்பிடிப்பின்போது வேலை செய்யும் துணை இயக்குனர்களிடம் கூட கதை சம்மந்தமாக எந்த ஒரு கலந்தாய்வும் செய்யாமல் இருந்தாராம். மேலும் இயக்குனர் பாலாவை போலவே எந்நேரமும் எதையோ யோசித்துக்கொண்டே படப்பிடிப்பில் ஹெச்.வினோத் இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.மேலும் படத்தில் நடித்த அஜித்திற்கு மட்டுமே ஒன் லைன் ஸ்டோரி சொல்லிவிட்டு, அப்படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியாருக்கு உங்கள் கதாபாத்திரம் இப்படி தான் என தெரிவித்தாராம்.

Also Read: வாரிசு, துணிவை விட இந்த படங்களுக்கு தான் எதிர்பார்ப்பு ஜாஸ்தியா.. 2023-னின் ஆரம்பத்திலேயே ரணகளமாகும் இணையதளம்

துணிவு படம் ரிலீசாகவுள்ள இந்த சமயத்தில் ஹெச்.வினோத் படப்பிடிப்பு தளத்தில் நடந்துக்கொண்ட நிகழ்வுகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இப்படி யாரையும் மதிக்காமல் இருப்பதை பார்த்தால் இயக்குனர் பாலா போன்றே தலைக்கனத்துடன் ஹெச்.வினோத் வலம் வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணம் அஜித் போன்ற முன்னனி நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக இயக்கியது தான் என கூறப்படுகிறது.

அடுத்த படத்தை கமலஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் இயக்க உள்ள ஹெச்.வினோத் அந்த படப்பிடிப்பிலும் இப்படி நடந்துக்கொண்டால், கட்டாயம் கமலின் ரியாக்ஷன் சற்று வேறுமாறிதான் இருக்கும். இதனிடையே ஹெச்.வினோத் அவரது நடவடிக்கையை மாற்றிக்கொண்டால் சினிமாவில் இன்னும் வளர்ந்து வருவார் என்பது கோலிவுட் வட்டாரத்தில் உள்ளோரின் கோரிக்கையாக உள்ளது.

Also Read: ட்ரைலரிலேயே மண்ணை கவ்விய வாரிசு.. மீசையை முறுக்கி வரும் அஜித்…

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -