சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கவனமாக காய் நகர்த்தும் அஜித்.. ஏகே 62 தாமதமாக வெளிவர இது தான் காரணம்

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படமானது வாரிசு உடன் மோதிய நிலையில் தற்பொழுது இரண்டு ஹீரோக்களும் அவர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். ஆனால் ஏகே 62 திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மிக கவனமாக காய் நகர்த்தி வருகிறார் அஜித். இதனால் தான் படப்பிடிப்பு தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்பொழுது விஜய் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திற்கான படப்பிடிப்பானது படு ஜோராக நடந்து வருகிறது. ஆனால் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 படத்திற்கு மகிழ் திருமேனி இயக்குனராக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான செய்தியை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

Also Read: அஜித் படத்தின் சீக்ரெட் கசிந்து விடும் என்பதால் கட்டளை போட்ட லைக்கா.. ஏகே 62 படத்திற்கு போட்ட பூஜை

இதனைத் தொடர்ந்து படத்தின் கதையை முடிவு செய்வதிலேயே பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவனால் ஏற்பட்டுள்ள குளறுபடியால், தற்பொழுது அஜித் தனது படத்தின் வெற்றிக்காக  ஒவ்வொரு அடியையும் கவனமாக மேற்கொண்டு வருகிறார்.

ஏனென்றால் ஏற்கனவே இவரிடம் ஆன்லைனில் படத்தின் கதையை கேட்டு ஓகே செய்துள்ளார் அஜித். ஆனால் அவை பிடிக்காமல் போனதால் இவர் நடிக்கும் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளார். இதனால் இந்த முறை எந்தத் ஒரு தவறும் நடக்கக்கூடாது என்று படத்தின் முழு கதை, வசனம்  என அனைத்தையும் அலசி ஆராய்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

Also Read: வசூல் வேட்டையாடிய வினோத்-அஜித் கூட்டணி.. 3 படங்களின் மொத்த வசூல்

இதனைத் தொடர்ந்து மறுபடியும் எந்த குளறுபடியும் நடக்காத வண்ணம் அஜித் காய் நகர்த்தி வருகிறார். மேலும் படத்தினை பற்றி முழுமையாக உறுதி செய்த பிறகே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்து வருகிறார். இதனால்தான் ஏகே 62 படத்தை பற்றிய அதிகாரபூர்வமான தகவலானது இன்னும் வெளிவராமல் இருக்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் கண்டிப்பாக அனைத்து பணிகளும் முடிவடைந்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அதற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் அஜித் தான் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Also Read: ஏகே 62 வாய்ப்புக்காக போட்டி போடும் நடிகைகள்.. தீயாய் வேலை செய்யும் வாரிசு நடிகை

- Advertisement -

Trending News