வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய் மட்டுமல்ல அஜித் குடும்பத்தில் வெடிக்க போகும் பிரச்னை.. பேய் ஓட்ட காத்திருக்கும் ஷாலினி

Thalapathy Vijay – Ajith Kumar: அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படபிடிப்புக்காக துபாயில் உள்ள அஜர்பைஜானில் இருக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகியும் படக்குழு இடம் இருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை. அஜித் தன்னுடைய ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது

நடிகர் அஜித்குமாரின் வழக்கமான படங்களைப் போல் இல்லாமல் இது ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் த்ரிஷா கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம். இதற்காக பயங்கரமாக உடல் எடையை குறைத்து வருகிறாராம். அஜித்திற்கு இந்த காட்சிகளுக்காக டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறார்களாம்.

இந்த பிளாஷ்பேக் காட்சியில் அஜித் மற்றும் த்ரிஷா இருவருக்கும் லவ் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்குமாம். நடிகர் அஜித்குமாரின் சமீபத்திய படங்களில் கதாநாயகி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தில் அஜித் மீண்டும் காதல் மன்னனாக நடிக்க இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும்.

இந்த ரொமான்ஸ் காட்சிகள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதில் தான் இப்போது சந்தேகம். ஏனென்றால் ஏற்கனவே லியோ படத்தில் தேவையில்லாத ஒரு காட்சியில் விஜய் மற்றும் திரிஷாவுக்கு லிப் லாக் வைத்து அது மிகப் பெரிய சர்ச்சையாகிவிட்டது. இதனால் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் அளவுக்கு போய்விட்டதாக சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் அஜித் படங்களில் ரொமான்ஸ் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது திடீரென்று த்ரிஷாவுடன் ரொமான்ஸ் செய்தால் அதை ஷாலினி எப்படி எடுத்துக் கொள்வார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். விஜய் வீட்டில் கும்மி அடித்தது பத்தாதா என த்ரிஷாவையும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் கிரீடம் படத்தில் காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிக்கும் படி இருக்கும். மீண்டும் அந்த ஜோடியை திரையில் பார்ப்பதற்கு சினிமா ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். என்னதான் சர்ச்சைகள் இருந்தாலும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஜோடிகளை மீண்டும் திரையில் பார்ப்பது ஒரு பெரிய ட்ரீட் ஆக இருக்கிறது.

- Advertisement -

Trending News