பொங்கலை டார்கெட் செய்த அஜித் படங்களின் மொத்த லிஸ்ட்.. எத்தனை சக்சஸ் தெரியுமா.?

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதால் தல தளபதியின் ரசிகர்களிடையே படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் அஜித்தின் திரைவாழ்க்கையில் பொங்கல் ரிலீசாக வெளியிடப்பட்ட திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி வாகை சூடியது.

அந்த வகையில் தற்பொழுது திரைக்கு வர இருக்கும் வலிமை திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் அஜித்தின் முதல் படமான வான்மதி 1990 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்டு திரைக்கு வந்தது.

இப்படம் அஜித்தின் திரை வாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ரெட், ஆழ்வார், தீனா, வீரம், பரமசிவம், விஸ்வாசம் போன்ற திரைப்படங்களும் பொங்கலுக்கு வெளியிடப்பட்டன. அதிலும் வீரம் மற்றும் விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.

நடிகர் அஜித்தின் முந்தைய வெற்றிப் படங்களான வில்லன், வீரம், விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் ஆங்கில எழுத்தான ‘வி’ என்ற எழுத்தினை கொண்டு தொடங்குவதாக உள்ளது அந்த வகையில் தற்பொழுது வலிமை திரைப்படமும் ‘வி’ என்ற எழுத்தில் தொடங்குகிறது.

valimai-ajith-cinemapettai
valimai-ajith-cinemapettai

கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்ட அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் வலிமை திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் தற்பொழுது வலிமை படத்தின் ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்