வயது கூடினாலும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. காட்டுத் தீயாக பரவும் புகைப்படம்

Ajith Latest Photo: தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் தல அஜித். இவர் இப்போது துணிவு படத்திற்கு பிறகு அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் விடாமுயற்சி படத்திற்காக சுமார் 15 கிலோ உடல் எடையை வெறித்தனமாக குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

மீசை, தாடி எல்லாம் குறைத்த அஜித்தின் லேட்டஸ்ட் லுக் இப்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவுகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் மருத்துவரான ரசிகையுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் அஜித் எங்கு சென்றாலும் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டார்.

அந்த வகையில் இப்போது மருத்துவரிடம் சேர்ந்து புகைப்படம் எடுத்திருப்பது இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. மேலும் மிக்ஜாம் புயலில் கோரத்தாண்டவத்தால் தற்போது சென்னை மக்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதில் குழந்தைகளுக்கான பால், வயதானவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்

பல கடைகள் மழை வெள்ளத்தால் மூடப்பட்டு விட்டன. இந்த சூழலில் காரம்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் அமீர்கான் ஆகியோர் தமிழக தீயணைப்புத் துறையினால் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த தகவலை அறிந்த அஜித் அங்கு சென்று அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் குடும்பத்தினர் கமிட்டி ஹால் செல்ல உதவியதாகவும் தகவல் வெளியானது. அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்டானது.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்

ajith-new-look-cinemapettai (1)
ajith-new-look-cinemapettai