ஏகே 64 சிறுத்தை சிவாவுக்கு இல்லையா.? அஜித்தை ரகசியமாக சந்தித்த இயக்குனர்

Ajith: சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து கங்குவா படத்தை வருட கணக்கில் எடுத்து வருகிறார். எப்போது அந்த படம் முடிந்து வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் அதற்கு முன்பாகவே இவர் அடுத்ததாக அஜித்தை இயக்கப் போகிறார் என்ற தகவலும் வைரலானது. துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சியில் நடித்து வந்த அஜித் இப்போது குட் பேட் அக்லியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விடாமுயற்சி சில சிக்கலில் இருக்கும் நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அவர் தற்போது கைகோர்த்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து ஒரு சர்ச்சைக்கு வித்திட்டது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய தகவலும் கசிந்துள்ளது. போட்டி போட்டுக் கொண்டு வரிசை கட்டிய 5 இயக்குனர்கள்,

மோகன் ராஜா
சிறுத்தை சிவா
வெற்றிமாறன்
H வினோத்
விஷ்ணுவர்தன்

ஆனால் அதில் சிறுத்தை சிவாவுக்கு பதில் மோகன் ராஜா இருப்பது தான் ஆச்சர்யம். அவருடைய தனி ஒருவன் 2 தற்போது தள்ளி போயிருக்கும் நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

அஜித் லாக் செய்த இயக்குனர்

அத்துடன் சேர்த்து அஜித் படத்தையும் அவர் இயக்கப் போவது தான் டபுள் ட்ரீட்டாக இருக்கிறது. சமீபத்தில் இவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்த நிலையில் கதையும் ஓகே செய்யப்பட்டு விட்டது.

அதில் மோகன் ராஜா ஏகே 64 படத்தை இயக்குகிறாரா அல்லது ஏகே 65 படத்தை இயக்குகிறாரா என்பது கொஞ்சம் இழுப்பறியாக இருக்கிறது. ஏனென்றால் சிறுத்தை சிவாவுக்கு ஹிந்தி ப்ராஜெக்ட் ஒன்றும் இருக்கிறது.

அவர் அஜித்தை இயக்குவதற்கு முன்பு அந்த படத்தில் கவனம் செலுத்தினால் மோகன் ராஜா தான் ஏகே 64 பட இயக்குனராக இருப்பார். அப்படி இல்லை என்றால் 65 ஆவது படம் அவருக்கு தான்.

ஆக மொத்தம் அஜித் இவரை தற்போது லாக் செய்து விட்டார் என்பது மட்டும் உறுதி. விஜய் விரைவில் சினிமாவுக்கு குட் பை சொல்ல இருக்கும் சூழலில் அஜித்தின் இந்த வேகம் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

அஜித் பற்றிய சுவாரசிய செய்திகள்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -