கட்சி மாநாட்டுக்கு தேதி குறித்த விஜய்.. வேறொரு ரூட்டில் ஸ்பீடு எடுக்கும் அஜித்

Ajith – Vijay: தளபதி விஜய் கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் இருக்கும் முக்கிய புள்ளிகளை தூங்க விடாமல் டென்ஷன் பண்ணி வருகிறார். அடிக்கடி கட்சி ஆலோசனைக் கூட்டம், அதிரடி முடிவுகள் என வாரத்திற்கு ஒரு அப்டேட் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வந்து கொண்டே இருக்கிறது. விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வையும் பார்க்கும் பொழுது நல்ல அரசியல் அனுபவம் இருக்கும் யாரோ ஒருவரால் பக்காவாக காய் நகர்த்தப்பட்டு வருகிறது என்பது நன்றாகவே தெரிகிறது.

விஜய் ஒரு பக்கம் அரசியல் கட்சி தொடங்கியதோடு சினிமாவை விட்டு விலகுகிறேன் என்ற பரபரப்பு வாக்குமூலத்தின் மூலம் ட்ரெண்டாகி வருகிறார். மற்றொரு பக்கம் நடிகர் அஜித்குமார் வாயை திறந்து எதுவும் பேசாமலேயே ட்ரெண்டாகி வருகிறார். அஜித் எங்கேயோ இருக்கும் ஏதாவது ஒரு போட்டோவை யாராவது எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டு விட்டால் கூட அந்த வாரம் முழுக்க அவர்தான் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்றில் இருக்கிறார்.

விஜய் தற்போது தன்னுடைய தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் நிர்வாகிகளை களம் இறக்கி இருக்கிறார். மொத்த தமிழ்நாட்டையும் 100 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் குறைந்த பட்சம் இத்தனை வாக்காளர்களை கட்சியில் உறுப்பினராக வேண்டும் என்ற டார்கெட் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாம் முடிய வரும் ஏப்ரல் மாதம் கட்சி மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Also Read:இந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 6 ஹிட் படங்கள்.. அஜித்துக்கு ஒரு பில்லானா, விஜய்க்கு என்ன தெரியுமா?

என்னதான் எங்களுக்குள் போட்டி பொறாமை இல்லை என்று அஜித் மற்றும் விஜய் காட்டிக் கொண்டாலும் ஒவ்வொரு சம்பவத்திலும் தங்களுடைய கெத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தான் இருக்கிறார்கள். இப்போது அரசியல் ரூட்டில் விஜய் ஸ்பீடு எடுத்திருக்கும் அதே வேளையில், நடிகர் அஜித்குமார் விஜய் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று காட்டுவதற்காக வேறொரு ரூட்டை கையில் எடுத்திருக்கிறார்.

வேறொரு ரூட்டில் ஸ்பீடு எடுக்கும் அஜித்

அஜித் குமார் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி மே ஒன்று என இதுவரை சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அந்தப் படத்தை தற்போது அஜித் ஏப்ரல் 14க்கு மாற்றி சொல்லிவிட்டாராம். அதே ஏப்ரல் மாதத்தில் தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு வேலையை ஆரம்பிக்கப் போகும் அஜித்குமார் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் டைட்டிலையும் வெளியிடப் போகிறாராம்.

விஜய் அரசியல் மாநாடு நடத்த இருக்கும் ஏப்ரல் மாதத்தில் அஜித்குமார் தன்னுடைய இரண்டு படங்களை களம் இறக்க ரெடியாகி கொண்டிருக்கிறார். அஜித் எதுவும் பண்ணாமலேயே சட்டென வைரலாகி விடுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி இருக்கும் பொழுது விஜயின் கட்சி மாநாட்டை ஒன்றுமே இல்லாமல் ஆக்குவதற்காக அடுத்தடுத்து பட அப்டேட்டுகள் என்ற ரூட்டை கையில் எடுத்து விட்டார் அஜித்.

Also Read:பிரம்மாண்டமாக நடக்க உள்ள விஜய்யின் முதல் மாநாடு எங்க தெரியுமா? தமிழக வெற்றிக் கழகத்தின் ஆரம்பபுள்ளி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்