ஆச்சரியப்படுத்தும் விடாமுயற்சியில் மறைக்கப்படும் உண்மை.. யாரு இந்த உமர் முக்தர்.?

Ajith leads different character in Vidaa Muyarchi: நம்ம சினிமாவில் யாரையும் அலட்டிக் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் பழகும் அல்டிமேட் ஸ்டார் அஜித். சில லாங் பைக் ரைடுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தை கையில் எடுத்தார். ஷூட்டிங் லேட்டா தொடங்குவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

தான் கையில் எடுத்த திரில்லர் ஸ்டோரிலேயே பல டூவீஸ்ட்களை ஒளித்து வைத்திருக்கும் மகிழ்திருமேனி அவர்கள் இயக்கத்தில் அஜித் விடாமுயற்சியில் ஒப்பந்தமானார். சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது, இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. விடாமுயற்சி கதையை பற்றி மகிழ்த்திருமேனிடம் கேட்க கதையோ, புதிருக்குள் விடுகதை! விடுகதைக்குள் மர்மம்! என மிகவும் சஸ்பென்ஸாக வைத்துள்ளார்.

மேலும் படத்தை வெற்றி செய்வதன் பொருட்டு எந்த ஒரு சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று அஜித் படப்பிடிப்பு குழுவினருக்கு கட்டளை இட்டுள்ளார். முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியுமா ஆங்காங்கே விடாமுயற்சியின் சில தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த தகவல் தற்போது நம்ம காதுக்கு வந்துட்டு போனா சும்மாவா விடுவோம்.

Also read: லியோ போல் செய்ய வேண்டாம்.. விடாமுயற்சிக்கு அஜித் போட்ட கட்டளை

கதையின் டைட்டிலிலேயே நாயகன் ஏதோ போராட போகிறார் என்று தெரிகிறது. என்ன போராட்டம்? நாட்டிற்குள் போராட்டமா? அல்லது இன்டர்நேஷனல் அளவில் உளவாளியாக வருகிறாரா? இதுவும் அல்லாமல் சாதாரண மனிதனாக இருந்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி தன்  மக்களுக்கு எதிரான வன்முறையை கட்டு அவிழ்க்கும், மண் ஆசை பிடித்த வெறியர்களை ஒடுக்கும் உமர் முக்தராக வரப் போகிறாரா? என்பது போன்ற பல மர்மங்களை ஒளித்து வைத்திருக்கிறது விடாமுயற்சி.

எண்ட்டர்டைமண்ட்காகவும் அல்லது விருப்பமான நடிகருக்காக அல்லது இயக்குனருக்காக படம் பார்க்க சென்றாலும் சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீண்ட காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன அந்த வகையில் அஜித் அவர்கள் இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்தது ஆச்சரியத்திற்குரிய விஷயமே.

காதல், நகைச்சுவை, ஆக்சன், திரில்லர் என்பது போன்ற நார்மல் படமாக இல்லாமல் ஏதோ ஒன்று மக்களுக்கு சொல்ல வருகிறார். மக்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்து  சிந்திக்க வைக்க போராடும் அஜித்தின் விடாமுயற்சி வெற்றி பெறுமா என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Also read: அஜித்துடன் படம் பண்ண போட்டி போடும் 5 இயக்குனர்கள்.. மீண்டும் விக்னேஷ் சிவன் போட்ட அப்ளிகேஷன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்