வெள்ளை முடி, கருப்பு சொக்கா.. என்ன தல, ஆளே மாறிட்டேள்! வலிமை வில்லன் வெளியிட்ட அஜித்தின் மாஸ் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வெற்றி தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது உச்சத்தில் மின்னிக்கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல், அஜித்தின் நடிப்பில் வரும் ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீசை குவித்து தள்ளுகிறது.

தற்போது தல அஜித் போனி கபூர் தயாரிப்பில், H. வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்கான அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வப்போது தல அஜித்தின் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களும், ஸ்டன்ட் காட்சி ஸ்டில்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை அந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் கார்த்திகேயா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறாராம். மேலும் தல அஜித்தின் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த பல ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ajith-valimai
ajith-valimai

புகைப்படத்தில் தல அஜித்  செம கிளாஸ் ஆகவும், மாஸ் ஆகவும் இருக்கிறார். இந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் பூஜித்துக் கொண்டிருப்பதோடு, 1 மில்லியன் டாலர் புகைப்படம் என்று ட்ரெண்டாக்கி வருகின்றனராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்