வலிமை அப்டேட்டுக்கு விடிவுகாலம் பொறக்கபோகுது.. குடு குடுப்பைகாரர் போல சேதி சொன்ன முரட்டு நடிகர்

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் என்றால் அது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் தான். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அப்டேட்டிற்காக பொருத்து பொருத்து பார்த்த ரசிகர்கள் நேற்று திடீரென வலிமை டீசர் வெளியாக உள்ளதாக வலிமை டீசர் என்ற ஹேஷ்டேக்கை டிரண்டாக்கினார்கள்.

இந்நிலையில் வலிமை டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக புதிய அப்டேட் ஒன்றை பிரபல நடிகர் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கண்ட அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இத்தனை நாட்களாக எதிர்பார்த்த வலிமை அப்டேட் கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்து வருகின்றனர்.

இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான நேர்க்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில் தான் வலிமை படத்தின் டீசர் தயாராகி விட்டதாகவும், விரைவில் வலிமை டீசரும் அதனை தொடர்ந்து வலிமை டிரைலரும் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதவிர வலிமை ஷூட்டிங் ஸ்பாட் மேக்கிங் வீடியோ ஒன்றும் தயாராகி உள்ளதாம்.

விரைவில் இந்த வீடியோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வராததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், பிரபல நடிகர் ஒருவர் வலிமை அப்டேட் வெளியிட்டு மகிழ்ச்சி அளித்துள்ளார்.

அதாவது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில், “விரைவில் வருகிறது தல தீபாவளி! டீசர் விரைவில்” என பதிவு செய்துள்ளார். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான ஆர்கே சுரேஷின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ட்விட்டரில் வலிமை ட்ரெண்டிங்கில் உள்ளது.

valimai-teaser-cinemapettai-1
valimai-teaser-cinemapettai-1
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்