வலிமைக்கு பயந்து 400 கோடி பட்ஜெட் படம் தள்ளிவைப்பு.. பிரம்மாண்டத்தையே பின்வாங்க வைத்த தல

அஜித் நடிக்கும் வலிமை படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பார்த்து தற்போது சினிமா பிரமுகர்கள் பலரும் தங்களது படங்களை வெளியிட தயக்கம் காட்டி வரும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு சிலர் அஜித் படத்திற்கு பிறகு தனது படங்களை வெளியிட தயாரிப்பாளரிடம் சென்று கெஞ்சி வருவதாகவும் கூறி வருகின்றனர்.

அதாவது அஜித் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை. இப்படம் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்தில் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அஜித்தின் வலிமை படம் வெளியாவதால் பலரும் தங்களது படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஒரு சிலர் அஜித் ரசிகர்களின் வரவேற்பு வலிமை படத்திற்கு பக்கபலமாக அமையும், அந்த நேரத்தில் தங்கள் படம் வெளியானால் வரவேற்பு குறையும் என்பதற்காக தற்போது படத்தை வெளியிட தயக்கம் காட்டுவதாக கூறுகின்றனர்.

தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி நடிகர்களும் நடித்துள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இப்படத்தை 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக ராஜமவுலி இயக்கியுள்ளார். அதனால் இப்படத்தை வெளியிடுவதற்கு பலரிடமும் அறிவுரை கேட்டு வருவதாக பலரும் கூறுகின்றனர்.

அதாவதுஆர் ஆர் ஆர் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வரவேற்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், ஆனால் அதைவிட அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் ராஜமௌலியின் எண்ணம். அதனால் தற்போது அந்தந்த மொழியில் வெளியாகும் பிரம்மாண்ட நடிகர்களின் படங்களுக்கு பிறகு தனது படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

valimai-rajamouli-cinemapettai
valimai-rajamouli-cinemapettai

அதாவது வலிமை படத்தின்போது ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானால் தமிழ்நாட்டில் வலிமை படத்திற்கு மீதான வரவேற்பு அதிகமாக இருக்கும். இதனால் ஆர் ஆர் ஆர் படத்தின் வசூல் பாதிக்கும், வசூலில் பெரிய அளவில் சாதனை படைக்க முடியாது என்பதற்காக தற்போது வலிமை படத்திற்கு முன்னதாகவே ஆர் ஆர் ஆர் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்