10 மாதங்களில் பாதி இந்தியாவை கடந்த தல அஜித்.. பைக் ரைடுனா இப்படி இருக்கனும்

வலிமை படத்தை முடித்த கையோடு பைக்கில் ஏறியவர் தான் இன்னும் இறங்காமல் வடமாநிலங்களில் பைக் ரைடு செய்து வருகிறார் நடிகர் அஜித். அஜித் ஒரு நடிகர் என்பதை தாண்டி அடிப்படையில் சிறந்த பைக் ரேசர் என்பது தான் உண்மை. அதனால் தான் அவரின் பல படங்களில் பைக் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் அஜித் தானாகவே அசால்ட்டாக செய்து வருகிறார்.

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம். அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே நடந்து விட்டது. இதனால் சற்று ஓய்வெடுக்க நினைத்த அஜித் படத்தை முடித்த கையோடு பைக்கில் ஊர் சுற்ற தொடங்கி விட்டார். தற்போது இந்தியாவில் பைக் ரைடு செய்து வரும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கூட கரடு முரடான சாலையில் அஜித் பைக் ஓட்டுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. இதனை தொடர்ந்து உயரான மலை உச்சியில் பாறையின் விளிம்பில் நின்று அஜித் எடுத்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கடந்த 10 மாதத்தில் மட்டும் நடிகர் அஜித் மூன்று கட்டங்களாக இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்த இடங்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் வாகா, அட்டாரி, ஜெய்ப்பூர், ஆக்ரா, சிக்கிம், பூடான், லக்னோ, ஹைதராபாத், வாரணாசி என இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மாநிலங்களும் இடம் பெற்றுள்ளது.

ajith-india
ajith-india

கடந்த பத்து மாதங்களில் பைக்கில் அஜித் இவ்வளவு நகரங்களை கடந்து விட்டாரா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து உள்ளனர். தற்போது வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அஜித் இதை முடித்த பின்னர் வெளிநாடுகளில் பைக் ரைடிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனுஷன் செமயா என்ஜாய் பண்றாரு போல..

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்