அஜித்குமார் ஏன் வாக்களிக்க வரவில்லை.? நீங்க சொல்ற காரணம் எதுவும் நம்பர மாதிரி இல்ல

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர். அதேப்போல திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய் சிவப்பு கலர் காரில் எளிமையாக வந்து வாக்களித்து விட்டு சென்றார். சென்ற முறை தேர்தலுக்கு வாக்களிக்க சைக்கிளில் வந்து இருந்தது போல இப்போது, எப்படி வரப்போகிறார் என்று எதிர்பார்த்த போது, காரில் வந்து வாக்களித்து மாஸ் காட்டினார்.

இதே போல பல பிரபலங்களும் வந்து தங்களது வாக்குகளை செலுத்திவிட்டு சென்றனர். ஆனால் அதில் ரஜினி, அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், திரிஷா, வடிவேலு, விஜயகாந்த் போன்ற முக்கிய நடிகர்கள் இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. இதற்கு பலரும் பல காரணங்களை கூறி வருகின்றனர்.

திரையில் மட்டும் வீர வசனம் பேசும் நடிகர்கள் நிஜத்தில் ஒரு தேர்தலில் வாக்களிக்கக்கூட வரவில்லையே என்று ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அதிலும் நடிகர் அஜித் எப்போதும் தேர்தல் சமயத்தில் முதல் ஆளாக சென்று, மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களிக்க கூடியவர்.அவரும் இந்த தேர்தலில் தலை காட்டவில்லை.

அஜித் எப்போதும் இது போன்ற முக்கியமான நிகழ்வுகளை தவறாமல் வந்து தனது கடமையை ஆற்ற கூடியவர். அப்படிப்பட்ட அஜித்குமார் ஏன் தேர்தலுக்கு வாக்களிக்க வரவில்லை என்பது தான் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய விவாதமாக மாறியது. அதுவும் தளபதி விஜய் வந்து வாக்களித்து விட்டு சென்றதால், அவரது ரசிகர்கள் அதை வைத்து அஜித் ரசிகர்களை சீண்ட ஆரம்பித்து விட்டனர். இதனால் சமூக வலைத்தளம் போர்க்களமாக மாறியது.

சரி அஜித் அவர்கள் ஏன் வரவில்லை..? என்னதான் ஆச்சு அவருக்கு..? என்று தீவிரமாக தேடிக்கொண்டு இருக்கும் போது மனுசன் சென்னையிலேயே இல்லையாம். அதுமட்டுமில்லாமல் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் வேறு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. அதுவும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் தான் அஜித்குமார் வாக்களிக்க வர முடியாமல் போய் விட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அஜித் வாக்களிக்க வந்த போது, ஒருவர் மாஸ்க் அணியாமல் இருந்து கொண்டு அஜித்திடம் அருகில் வந்து, செல்ஃபி எடுக்க முயன்று இருந்தார். அப்போது கடுப்பான அஜித் அவரது மொபைல் போனை கையில் இருந்து பிடுங்கி வைத்துக்கொண்டார். அது அந்த சமயத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. பிறகு அவரை அழைத்து புத்திமதி சொல்லி மொபைல் போனை திருப்பி கொடுத்தார். இதுபோன்ற நிகழ்வுகளினால் தான், அஜித் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Next Story

- Advertisement -