ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குவாரியில் பணம் கொட்டுவதால் பெரிய முதலைக்கு அஜித் போட்ட கொக்கி.. மனசு கோணாமல் நடக்கும் தயாரிப்பாளர்

VidaaMuyarchi – AK63: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படபிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் எந்த அப்டேட்டும் விடாமல் பட குழு அஜர்பைஜானில் சைலன்டாக ஷூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளுக்காக அஜித்துக்கு டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகர் அஜித் எப்போதுமே ஒரு படத்தின் வேலை முடிவதற்குள் அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டார். ஆனால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவருடைய 63 வது அப்டேட் அரசல் புரசலாக வெளியானது. அஜித் தன்னுடைய தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைய இருப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஃபேன் பாய் மொமெண்ட் அமைந்தது போல் அடுத்து அஜித்திற்கும் ஆதிக் ரவிச்சந்திரனால் அமைய இருக்கிறது. விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு அஜித்திற்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறது. அதே நேரம் அவருடைய 63வது படத்திற்கு 175 கோடி வாங்க இருக்கிறார்.

விடாமுயற்சி படத்தின் ரிசல்ட் தெரிவதற்கு முன்பே அஜித்தின் சம்பளம் இப்படி உச்சாணி கொம்புக்கு ஏறியதற்கு முழு காரணம் அந்த படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தான். இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், விடுதலை போன்ற ஹிட் படங்களை தயாரித்து இருக்கிறார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு நடிகர் சூரி சென்றிருந்தபோது விடுதலை படத்தை பற்றி பேச்சு எழுந்திருக்கிறது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் பற்றி பேசும் பொழுது சூரி தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சொந்தமாக குவாரி வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை வைத்து தான் படங்களை தயாரிப்பதாகவும், ரொம்பவும் சுத்தமான கை என்றும் சொல்லி இருக்கிறார்.

அதனால் தான் அஜித் தன்னுடைய 63 வது படத்தை தயாரிப்பதற்கான வாய்ப்பை ஆர் எஸ் என்போடெயின்மென்ட் நிறுவனத்திற்கு கொடுத்து இருக்கிறார். எல்ரெட் இதுவரை பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரிக்காததால் இந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டார். இதனால் தான் அஜித்திற்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாகவும் பேசப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

Trending News