வித்தியாசமான தலப்பா பூமாலையில் அஜித்.. வினோத் வெளியிட்ட வலிமை பட சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

அஜித் குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் கேட்காத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு சென்ற இடமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். அதனால் படக்குழு வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டது.

மேலும் அஜித் நடிப்பில் உருவான வலிமை படத்தின் அறிமுக பாடல் நாங்க வேற மாதிரி படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலும் சமூக வலைதளங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அஜித் குமார் வலிமை படத்தில் நடித்து முடித்த பிறகு பைக் ரைட் மேற்கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது வலிமை படத்தின் அம்மா பாடலை வெளியிட்டனர். இப்பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

valimai
valimai

தற்போது ஹெச் வினோத் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அஜித் கழுத்தில் பூமாலை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்க்கும் போது அஜித் வலிமை படத்தில் கலந்து கொண்ட போது அவரை வரவேற்பதற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறிவருகின்றனர். ஒரு சிலர் வலிமை படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறி வருகின்றனர். ஆனால் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Sharing Is Caring:

அதிகம் படித்தவை