மீண்டும் உடம்பை குறைத்த அஜித்.. அடுத்த பட கெட்டப்பா? ஏவுகணை வேகத்தில் பரவும் புகைப்படம்

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் கேட்காத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு சென்ற இடமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். அதனால் படக்குழு வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

மேலும் அஜித் நடிப்பில் உருவான வலிமை படத்தின் அறிமுக பாடல் நாங்க வேற மாதிரி படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலும் சமூக வலைதளங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அஜித் குமார் வலிமை படத்தில் நடித்து முடித்த பிறகு பைக் ரைட் மேற்கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அடுத்த பாடலை வெளியிடும் படி கேட்டு வருகின்றனர்.

ஆனால் படக்குழு இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டும் என்பதால் அந்த காட்சியை முடித்து விட்டு பிறகு படத்தின் அடுத்த அப்டேட் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளனர். தற்போது அஜித் குமார் வலிமை படத்தின் போது ஹைதராபாத்திலிருந்து புகைப்படம் வெளியாகி உள்ளது.

ajith kumar
ajith kumar

இப்புகைப்படத்தில் அஜித் குமார் பைக் ரேஸ் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது. மேலும் அஜித் மாஸ்க் வைத்துள்ளது பார்த்த ரசிகர்கள். அனைவரும் பின்பற்றும் விதியை அஜித்குமார் பின்பற்றி வருகிறார் என கூறி வருகின்றனர். தற்போதைய இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்