வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க பயந்த அஜித்.. வெளிப்படையாக கூறிய மாஸ்டர்

அஜித் குமார் நடிப்பில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் வரலாறு. இப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இன்று வரை தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அதிலும் இப்படத்தில் இவர் நடித்த நடிப்பு இன்று வரை பல பிரபலங்களும் பல பேட்டிகளில் கூறி வருகின்றனர்.

இப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி மாஸ்டர் சிவசங்கர் வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது சிவசங்கர் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்போது கேஎஸ் ரவிக்குமார் வரலாறு படத்தில் சண்டைக் காட்சியுடன் நடனமாடுவது போல ஒரு சில காட்சிகள் எடுக்க வேண்டும். அதனை சிவசங்கர் செய்யுமாறு கேட்டுள்ளார்.

அப்போது அஜித் உடல் மெலிந்து இருந்ததை பார்த்த மாஸ்டர் சிவசங்கர் அஜித்திற்கு பல நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்துள்ளார். உதாரணத்திற்கு வரலாறு படத்தில் அஜித் அவரது அம்மாவிடம் எனக்கு திருமணம் வேண்டாம் என சொல்லிக்கொண்டு வெத்தலையை கிள்ளி போடுவது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் கூட அஜித் நளினத்துடன் அந்த காட்சியை நடித்திருப்பார்.

முதலில் இக்காட்சியை சொல்லித் தரும்போது போது அஜித் குமார் சார் எனக்கு இது எல்லாம் வராது எனக்கு வேறு ஏதாவது சொல்லிக் கொடுங்கள் என கூறியுள்ளார். ஆனால் மாஸ்டர் சிவசங்கர் சார் படத்திற்கு இதுதான் தேவை நளினம் ரொம்ப முக்கியம் தைரியமாக வாருங்கள் படத்திற்கு இதுதான் அடையாளம் என கூறி அவருக்கு நடனத்தை சொல்லிக் கொடுத்துள்ளார்.

மேலும் இக்காட்சியில் நடிக்கும்போது அஜித் இதையெல்லாம் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தயக்கம் காட்டியதாகவும், அப்போது மாஸ்டர் சிவசங்கர் நான் மன்மதனை பார்த்ததில்லை ஆனால் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள், இதையெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம் என பேசியதாகவும்.

sivasankar
sivasankar

மேலும் உங்களுடைய ரசிகர்கள் இந்த நடிப்பை பல வருடங்களுக்கு பேசுவார்கள். இதன் மூலம் உங்களுக்கு பாராட்டுகள் குவியும். இந்த நடிப்பினை இழிவாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு கலையாக நடியுங்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் வரலாறு படத்தில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவத்தை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்