அஜித் போல் கார் ரேஸ் ஓட்டும் நிவேதா பெத்துராஜ்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

தமிழில் ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். இதனை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொதுவாக என் மனசு தங்கம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் பொன் மாணிக்கவேல் படம் வெளிவர உள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நிவேதா நடித்து வருகிறார். விண்வெளி வீராங்கனை, போலீஸ் அதிகாரி என போல்டான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிவேதா, தற்போது தன் கவனத்தை ரேஸ் கார் பக்கம் திருப்பி உள்ளார். உடற்பயிற்சி, யோகா செய்வதை வழக்கமாகக் கொண்ட நிவேதா, தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார்.

அந்த வரிசையில் தற்போது பார்முலா ரேஸ் காரை பார்முலா ட்ராக்கில் ஒட்டி பழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். முதல் முறையாக நடிகர் அஜித்திற்கு பின் பார்முலா ரேஸ் காரை ஓட்டிய பெருமையை பெற்று இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

nivetha pethuraj
nivetha pethuraj

மேலும், ரேஸ் கார் பயிற்சி பெறும் புகைப்படங்களை பதிவிட்டுள்ள நிவேதா, “இது என்னுடைய மற்றொரு முயற்சி, மற்றொரு கனவு, மற்றொரு வாழ்க்கை” என கேப்ஷன் வைத்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் நிவேதாவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -