தமிழ் சினிமாவின் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பென்றால் நடிகர் விஜயும்,அஜித்தும் ஒன்றாக சேர்ந்து ஒரே திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது உள்ள சூழலில் அஜித் மற்றும் விஜய் இருவரும் தனித்தனியாக கொடிக்கட்டி பறந்து வருகின்றன.
இருந்தாலும் இதனை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரன், தனது மகனும் இயக்குநருமான வெங்கட் பிரபு, விஜய் மற்றும் அஜித் இருவரையும் வைத்து ஒரே படத்தில் நடிக்க வைக்க ஆயத்தமாகி வருகிறார் என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வெங்கட்பிரபு தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், வெங்கட்பிரபு உண்மையிலேயே விஜய் மற்றும் அஜித் இருவரையும் வைத்து ஒரு படத்தில் நடிக்க வைக்கப் போவதாகவும், கதை ரெடியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படத்தின் கதையை மெருகேற்றும் வேலையை 3 இயக்குனர்களிடம் கொடுத்துள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஏகே61 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் ஏகே62 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அதேபோல் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இதனிடையே அஜித்திடம் படத்தின் கதையின் கூறி சம்மந்தம் வாங்கியுள்ளதாகவும், விஜய்யிடம் கதையை கூறி சம்மதம் வாங்க இருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.