15 மில்லியன் வியூஸ் தாண்டிய வலிமை.. ஆனாலும் அந்த விஷயத்தில் பிகில் தான் டாப்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகியுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் அதை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். இத்தனை காத்திருந்த காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இணையதளத்தை தெறிக்க விட்டு கொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் மூலம் பெரிய திரையில் அஜித் தரிசனம் கிடைக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் படத்தின் டிரைலரை டிரண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் டிரைலர் நேற்று மாலை வெளியான நிலையில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.

அதன்படி வலிமை படத்தின் டிரைலர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. இந்நிலையில் வெளியான நான்கு மணி நேரத்திலேயே சுமார் 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் வலிமை படத்தின் டிரைலர் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாகவும் உள்ளதால் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். மேலும் உயிரை எடுக்குற உரிமை நமக்கில்லை. வலிமைங்கிறது அடுத்தவன காப்பாத்த தான் அவன அழிக்க இல்லை என்பதுபோன்ற மாஸ் டயலாக்குகளால் படத்தின் டிரைலர் தாறுமாறாக டிரண்டாகி வருகிறது.

தற்போது வரை 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் வலிமை படத்தின் டிரைலர் பெற்றுள்ளது. இன்னும் ஏராளமானோர் பார்த்து கொண்டிருப்பதால் இந்த டிரைலர் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்தில் பிகில் ட்ரைலர் ஒரு மில்லியன் லைக் வாங்கி சாதனை படைத்தது. அந்த ரெக்கார்டை தற்போது வலிமை ட்ரைலர் உடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் முடியவில்லை.

bigil-trailer-record
bigil-trailer-record

Next Story

- Advertisement -