வலிமை படப்பிடிப்பில் போனி கபூர் சொல்லியும் கேட்காத அஜித்.. பகிர் கிளப்பிய எச்.வினோத்

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ, தீம் மியூசிக் வெளியான நிலையில் இத்திரைப்படம் குறித்த பல சுவாரசியமான தகவலை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் எச்.வினோத். இப்படம் காவல் துறை சம்பந்தப்பட்ட படம்.

இந்தப்படத்தில் இன்றைய குடும்பங்களும் மற்றும் இளைய சமுதாயத்தினரும் ஒரு அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பது குறித்து தான் வலிமை படம் பேசுகிறது என்று வினோத் கூறியுள்ளார். அத்துடன் அஜித்தின் வலிமை பற்றியும் வினோத் கூறியுள்ளார்.

சாதாரணமாக நமக்கு ஒரு சின்ன காயம் பட்டாலும் பெரிய அளவில் பில்டப் கொடுப்போம். ஆனால் அஜித்தை பொருத்தவரை அவருக்கு வலியைத் தாங்குவது பழகிவிட்டது. வலிமை படப்பிடிப்பில் அஜித் பைக் சேஸிங் காட்சிகள் எடுக்கும்போது பைக்கில் இருந்து கீழே விழுந்து அவருக்கு அடிபட்டு விட்டது. இதனால் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்துக்கு இரண்டு நாள் ஓய்வு கொடுக்கலாம் என கூறினார்.

அஜித் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மறுநாள் இரவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் பைக் சேஸிங் காட்சி என்பதால் அஜித்துக்கு மூன்று லேயர் உடைகளை அணிய வேண்டும். ஆனால் அடிபட்டு புண்ணாக இருக்கும் காலில் அது போன்ற உடை அணிவது கடினம் என்ற போதும் அந்த உடையை அணிந்து கொண்டு மீண்டும் அஜித் நடிக்க தயாரானார்.

அவருடைய வலிமை பார்த்த அனைவரும் ஆச்சரியபட்டோம். அஜித் நடிப்பின் மேல் உள்ள ஈடுபாடு ஆல் தனது உடம்பில் எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படப்பிடிப்பில் நடித்தது அவரது வலிமையை காட்டுகிறது என வினோத் கூறினார். வலிமை படத்தை தொடர்ந்து இதே கூட்டணியில் அடுத்தப் படமும் உருவாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்