போனி கபூர் எதிர்பார்த்த அதிர்ஷ்டம் கை கூடியது.. நூறு கோடி பார்சல் பண்ணுங்கப்பா

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது பரவல் குறைந்தவுடன் ஒவ்வொரு தளர்வுகள் ஆக அரசு அறிவித்து வருகிறது. கர்நாடக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் போன்றவற்றிற்கு பிப்ரவரி 5 முதல் 100 சதவீத ஆக்கிரமிப்பில் திறக்க அரசு அறிவித்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் எப்போது திரையரங்குகள் 100 சதவீத இருகைகளுடன் திறக்கப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பல்வேறு படங்களின் ரிலீஸ் தேதி தற்போது தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருந்த வலிமை படம் கொரோனா காரணமாக தள்ளிப் போனது.

அதனால் போனி கபூர் எந்தவித தடை வந்தாலும் பிப்ரவரி 24ஆம் தேதி கண்டிப்பாக வலிமை படத்தை ரிலீஸ் செய்ய தயாராக இருந்தார். ஆனால் தற்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவது வசூலை பாதிக்கும் என பலரும் கருதினார்கள்.

கர்நாடகாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பிப்ரவரி 22 முதல் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்புகளில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதனால் வலிமை படம் 100 சதவீத இருக்கைகளுடன் வெளியாக உள்ளது. இதனால் பலமுறை வலிமை தள்ளிப் போனாலும் தற்போது போனிகபூர் வலிமை படம் மூலம் எதிர்பார்த்த லாபத்தை பெற உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்