பிப்ரவரியில் ரிலீஸ் தேதியை லாக் செய்த வலிமை படக்குழு.. படைக்கு முந்து பந்திக்கு பிந்து

எச் வினோத், போனிகபூர், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் அஜித் இளமையாக உள்ளது போன்ற பல்வேறு மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

கொரோனா முதல் அலைக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட வலிமை படம் நீண்ட காலமாக வெளியாகாமல் உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒவ்வொருமுறை அறிவிக்கப்படும் போதும் சில காரணங்களினால் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 வலிமை படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்தது.

இதனால் அப்போது வலிமை படத்தை ரிலீஸ் செய்தால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் தேதி குறிப்பிடாமல் வலிமை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பொங்கலுக்கு வெளியாக இருந்த ஆர் ஆர் ஆர் போன்ற பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களும் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனால் கூடிய விரைவில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்பின் பல தடைகள் வந்தாலும் வலிமை படத்தை பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் உறுதியாக உள்ளாராம். இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள். கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் வரிசை கட்டி நிற்பதால் யார் முதலில் இறங்குவது, களத்தில் யார் வசூலை அள்ளுவது என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் வலிமை, படைக்கு முந்தி வெளியிடப்போவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்