பொங்கல் ரேஸில் இருந்து விலகிய வலிமை.. அஜீத் படக்குழு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

valimai
valimai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை படத்தை பார்ப்பதற்காக இவரது ரசிகர்கள் 3 வருடமாக காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் வலிமை படம் பொங்கலன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

இதனால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். மேலும் இப்படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் வலிமை படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 300 கோடிக்கு வாங்குவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாகவும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தற்போது வலிமை படத்தை திரையரங்கில் வெளியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்களின் உடல் நலம் கருதியும் படத்தை வெளியிடவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மேலும் இத்தனை வருடங்களாக காத்திருந்தும் தற்போதும் படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  படக்குழுவினர் கூடிய விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அதுவரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

valimai-suresh-chandra-twit
valimai-suresh-chandra-twit

மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் வலிமைப்படுத்தி பொங்கலன்று வெளியிட்டு தங்களது வசூலை வாரிக் குவிக்கும் என திட்டமிட்டிருந்தனர் ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் தற்போது படத்தை வெளியிட முடியாது என கூறியதால் தியேட்டர் உரிமையாளர்கள் வருத்தத்தில் உள்ளனர் மேலும் வலிமை படம் கண்டிப்பாக திரையரங்குகளில் வெளியிட வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner