தீபாவளிக்கு வலிமை படம் வெளிவராததற்கு முக்கிய காரணம்.. தந்திரமாக செயல்பட்ட போனிகபூர்

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் கார்த்திகேயா, ஹியூமா குரோஷி, யோகி பாபு உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர்.

வலிமை படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது, அதன் பிறகு இரண்டாவது பாடலும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. சில தினங்களுக்கு முன்னர் இப்படத்திலிருந்து வெளியான விசில் தீம் மியூசிக் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

வலிமை படம் தீபாவளி வெளியீடு, கிறிஸ்துமஸ் வெளியீடு என்று பல்வேறு வெளியீட்டுத் தகவல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது. ஒருவழியாக வலிமை படம் அடுத்த ஆண்டு 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் இயக்குனர் வினோத் தீபாவளிக்கு வலிமை படத்தை ஏன் வெளியீடு செய்ய முடியவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார்.

வலிமையை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் தியேட்டர் பிரச்சனையால் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார். அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள அஜித்துக்கு தியேட்டர் பிரச்சனையா என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் வெளியானதால் தான் வலிமை படத்தை ரிலீஸ் செய்யவில்லை. ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் வசூலை பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுத்து உள்ளார்கள் என பலரும் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் அஜீத்தின் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்காக காத்திருக்கிறார்கள். இதைப் பற்றி தயாரிப்பாளர் போனி கபூர் எதுவும் தெரிவிக்காமல் இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் கவலை அளிக்கிறது. இதைத்தவிர அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை கூட்டணி சேர உள்ளதால் அதைப் பற்றிய எந்ந தகவலும் வெளிவராததால் ரசிகர்கள் எரிச்சலில் உள்ளார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்